நந்திகள் 🏵️ கோபுரத்தடியிலே, கோனிய முகமும் வாடிய வயிறுமாய்,...
நந்திகள் 🏵️
கோபுரத்தடியிலே,
கோனிய முகமும்
வாடிய வயிறுமாய்,
கையிலே வட்டிலேந்தி
வயிறு வளர்க்கும் வரியோனும், சகல சௌந்தர்ய சஞ்சீவியும்
சமமாய் சந்நிதானத்தில் சஞ்சரிக்கலாகுமா?
சங்கரன் பொறுத்தாலும் சாத்திரம் பொறுக்குமா?
கோத்திரத்தை கூறி பொய் சாத்திரத்தை நாட்டி,
பார் திறத்தை பங்குபோட்ட பதிபக்தி மான்கள்...
கடவுளையும் காண்பதற்கு கணக்கு போட்டு காசு வாங்கும் கண்ணியவான்கள் கொண்ட புண்ணிய தேசமிது...
காணிக்கையை தட்டிலிட்டால், கழுத்திலொறு மாலைவிழும்.,
காலனாவும் இல்லையென்றால் காலனாய் சினந்துகொள்ளும்..
நிம்மதி இருக்குமிடமே கடவுளின் இல்லம்.. நிம்மதியை தேடி கோயிலுக்குள் செல்லாதே,,,
உள்ளே அர்ச்சகர் மட்டுமே இருக்கிறார்.., கடவுளோ அனாதைகளுக்குடையில்
அடையாளமின்றி அமர்த்திருப்பார்.
ஏனெனில், இங்கு நந்தனார்கள்
நிரம்ப உண்டு.. நந்திக(ல்)தாம் நகர்வதில்லை.. 🌹🐄