எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்பர் ஒன்🏵️ அஞ்சில மூனு நாலு அவிஞ்சித்தான் போச்சு.....

நம்பர் ஒன்🏵️



அஞ்சில மூனு நாலு அவிஞ்சித்தான் போச்சு..
பிஞ்சிக வயிறு காஞ்சித்தான் போச்சு..
மூனு நாலு கூலியும் முழுசா வல்லே,
குழம்பு வச்சி சோறு துண்ண காய்கறி இல்லே..
எரிவாயு வெல ஒசத்தி மானியம் ரத்து,
விறகு புகையில் தோன்றுதய்யா
கண்களில் முத்து..
வெல வாசிய நெனச்சு நெனச்சு வேகுறோம் நித்தம்.,
வித விதமாய் பண்டிகைய காலண்டர் சொல்லும்..
தேதிகள கிழிச்சி கிழிச்சி நால கடத்துறோம் - நாட்டின்
நம்பர் ஒன்னு மாநிலத்தில் குடும்பம் நடத்துறோம் 🌹



பதிவு : குறள்மணி
நாள் : 5-Apr-22, 11:50 pm

மேலே