கவனம் 🏵️ பெண்ணே பார்த்துப்போ.. நீ பெண் என்பதால்...
கவனம் 🏵️
பெண்ணே பார்த்துப்போ..
நீ பெண் என்பதால் பார்த்துப்போ..
உன் பாதையில் பூக்கள் இல்லை..
முட்கள் நிரம்ப உண்டு.
உன் வழிதனில் வசந்தமில்லை,
வலி தரும் வடுக்கள் நிரம்ப உண்டு.
கண் எனும் கரிய ஈட்டியால்
உன் கற்பினை காவிடும் கழுகுகள் நிரம்ப உண்டு..
பெண்ணே பார்த்துப்போ...
உடலையும் தசையையும் உட்கொண்டு வாழும், நர மாமிச நாசக்காரர்கள் நிறைய உண்டு..
பெண்ணே பார்த்துப்போ..
நீ, குழந்தையோ குமரியோ கொல்லிவாய் கோட்டான்கள் கொள்கை பார்ப்பதில்லை..
பெண்ணே பார்த்துப்போ..
உனக்கான ஆயுதமாம்.. நெஞ்சினில் வீரமும், கண்களில் நெருப்பையும் சுமந்து போ..
கயவர்களின் கைகளை வெட்டி எறி..
காமுகனின் கண்களை உன் நெருப்பால் சுடு..
பெண்ணே பார்த்துப்போ,
உன் பாதையில் முட்களே உண்டு.. பூக்கள் இல்லை 🌹