எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை . . . சிலுசிலுவென இருக்கிறது, சில்லரையாய்...

மழை . . .


சிலுசிலுவென இருக்கிறது,

சில்லரையாய் பொழிகின்றாய் !

உன்னால் குளிர்ந்தது மண் மட்டுமல்ல,

விவசாயின் மனமும்தான் !

வானிற்கு வண்ணமிட்டு வானவில்லாய்,

வையகத்திற்கு உன்னையிட்டு உயிரைவிட்டாய் !

ஏன் வந்தாய் எங்கு சென்றாய் தெரியவில்லை,

மயங்கி நின்றேன் உன் மழைத்துளியில் !

மேகம் கட்டிய முத்துமணியிலிருந்து சிதறிய முத்துக்களே !

உன்னை அள்ளிக்கோர்த்தேன் என் கவிதைகளால் . . .

பதிவு : Srinivasan
நாள் : 16-Jun-22, 8:53 am

மேலே