குயில்கூவும் சோலையிலே கோதையவள் போகையிலே மயிலாடும் தாவணியும் மன்மதனைத்...
குயில்கூவும் சோலையிலே
கோதையவள் போகையிலே
மயிலாடும் தாவணியும்
மன்மதனைத் தாக்குதடி
(குயில்கூவும்)
வானோர ஊஞ்சலிலே
வந்தமர்ந்த வெண்ணிலவு
மின்வண்ணத் தோகைவிரித்து
மேதினியில் ஆடியதே
(குயில்கூவும்)
செஞ்சாலி வயற்காடாய்
செம்போத்தும் கொஞ்சுகின்ற
கோலமயில் துணைகூவும்
கோதையவள் எழில்மேவும்
(குயில் கூவும்)
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
வஞ்சியவள் பேரழகை
செந்தமிழில் தூரிகையிட்டேன்
சிரிக்கின்றாள் கவிதனிலே
(குயில் கூவும்)