எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேண்டும் !!! தீர தனிமையில் இருந்து மீட்டெடுக்க ஓர்...

வேண்டும் !!! 


தீர தனிமையில் இருந்து மீட்டெடுக்க ஓர் குருட்டு காதலன்
சலிப்புகள் இன்றி சூறையாடும்
சலிக்காத காதல் 
என்றும் தீரா அட்சய பாத்திரமாய்
இடைவிடாத அன்பு
அழுதிடும் போது ஆறுதலாய் மங்காத அரவணைப்பு
ஊடல் இன்றி அடிமையென
பித்தாகும் பித்தன் 
மங்கிய விழிகளுக்குள் மரணம் தாண்டி கைதொடர நம்பிக்கை 
ஆர்பரித்து கொட்டும் மழைக்கு இதமாய் பருகும் தேநீர் போல உரையாடல்
மொத்தத்தில் - சல்லி சல்லியாய் நொறுங்கி போன மனதில் முழு பிரதிபலிப்பாய் என்னவன் எவனோ அவன் வேண்டும்.

 - கௌசல்யா சேகர்
     04-12-2023

நாள் : 4-Dec-23, 2:38 am

மேலே