சந்தையில் தொலைத்த தந்தையை தேடும் பிள்ளை போல் மனம்...
சந்தையில் தொலைத்த தந்தையை தேடும் பிள்ளை போல்
மனம் உன்னை தேடுகிறது....
உன் கரம் பிடித்து கடந்து வந்த பாதைகளில் இன்று நான் மட்டும் நடந்து செல்கிறேன் கனத்த உன் நினைவுகளோடு ...!
இயங்காத என் நாட்களும்....
சிறைப்பட்ட சிந்தனைகளும்....
எங்கே தொலைத்தேன் என் இயல்புகளை...?
வலிகளில் சரிந்த மனதை ...
வரிகளில் வருட நினைக்கிறேன் வார்த்தைகளும் வர வில்லை...
வெற்று காகிதமாய் ஏனோ நான்..!
மூளையே போதும் எங்காவது ஒரு மூலையில் ஓய்வு எடு ...
சிந்திக்க முடியாமல் சிதைந்து போய் உள்ளேன் ...!
சல்லடையாய் போன மனம் ...
தைப்பதாய் நினைத்து ஊசிகள் மேலும் கிழிக்க ...
மீண்டு வர தான் பார்க்கிறேன்...
ஏனோ மீண்டும் மீண்டும் உடைந்து கொண்டே போகிறேன் வலி மிகுந்த நினைவுகளால் ..
என்னை மீட்டுக் கொடு ...
இல்லையெனில்
மரணத்திடம் காட்டிக் கொடு!