எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லா நகைச்சுவையும் நடக்கும் இடம் பேருந்து பயணம் மூன்று...

எல்லா நகைச்சுவையும் 

நடக்கும் இடம் 
பேருந்து பயணம் 

மூன்று பேர் 
அமர வேண்டிய இருக்கை 
அவரது துணிப்பையும் 
இடம் பிடித்துக்கொள்கிறது 

ஆ என்கிற சங்கீத சத்தம் 
பாடியவர் யாரப்பா ?? 
யாரோ கால மிதிச்சுட்டாங்க
கண்ணீர் ததும்பும் குரலில் 
அவரின் பேருந்து பயணம் 

தற்காத்துக்கொள்ள உயர்த்திய கைகள் 
அருகில் இருப்பவரின் 
மூக்கை தட்ட 
தட்டியவர் யாரென்று ? 
எட்டிப்பார்க்கிறது 
சிறு துளி ரத்தம் 

காற்றாற்று வெள்ளம் 
ஊரை சூழ்தாற்போல 
தூக்கம் நிரம்பி 
வழிகிறது ஒருவருக்கு 
பேருந்து பயணம் 

முந்நூறு ரூபா 
சேலை - என்ற 
முணுமுணுப்புக்கிடையில்.....

கொஞ்சம் தள்ளி நில்லுமா 
பெண்களுக்குள் சலசலப்பு 
அதுவும் பேருந்து பயணம் 

கொஞ்சல் சிரிப்பைத் தரும் 
சில்லறைகளுக்கு தட்டுப்பாடு 
நடத்துநர் சலித்துக்கொள்கிறார் 
பேருந்து பயணத்தில் 

முன்பக்கம் ஏறும் 
ஆண்மகன்களுக்கு 
அவ்வப்போது வார்த்தையில் 
சவுக்கடி கொடுத்துவிடுகிறார் .....

அங்கே மெல்லிய குரல் 
இளவட்டம்னா அப்படித்தான் பா 

மண்டையில் ஏற 
மறுக்கும் கணித பாடம் 
போல படியில் 
பயணிக்கும் இளசுகளும் 

நடத்துநர் நிலைமை 
பாவம் என்கிறது 
அப்போது தொடங்கப்பட்ட 
நீதிமன்றம் 
பேருந்து பயணம் 

இவங்க இப்படித்தான் பா 
என்கிறது மீசை 
நரைத்த இளைஞர்கள் 

இருக்கை ஐம்பத்து மூன்று
கூட்டல் இரண்டு 
ஆனால் அதிலும் 
சந்தேகம் சிலருக்கு 

அப்படியே கொஞ்சம் 
அறிவுரை வழங்கும் 
ஞானிகள் - வியக்கிறது 
இத்தனை உலகமா என்று 

பேருந்து பயணத்தில் 
நான் இறங்க வேண்டிய 
இடம் இது தான் 

அத்தனையும் பேருந்து பயணம் 
அடுத்தும் நாம் சந்திப்போம் 

பதிவு : ஆத்ம யோகி
நாள் : 25-Aug-25, 12:58 pm

மேலே