எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லா நகைச்சுவையும் 

நடக்கும் இடம் 
பேருந்து பயணம் 

மூன்று பேர் 
அமர வேண்டிய இருக்கை 
அவரது துணிப்பையும் 
இடம் பிடித்துக்கொள்கிறது 

ஆ என்கிற சங்கீத சத்தம் 
பாடியவர் யாரப்பா ?? 
யாரோ கால மிதிச்சுட்டாங்க
கண்ணீர் ததும்பும் குரலில் 
அவரின் பேருந்து பயணம் 

தற்காத்துக்கொள்ள உயர்த்திய கைகள் 
அருகில் இருப்பவரின் 
மூக்கை தட்ட 
தட்டியவர் யாரென்று ? 
எட்டிப்பார்க்கிறது 
சிறு துளி ரத்தம் 

காற்றாற்று வெள்ளம் 
ஊரை சூழ்தாற்போல 
தூக்கம் நிரம்பி 
வழிகிறது ஒருவருக்கு 
பேருந்து பயணம் 

முந்நூறு ரூபா 
சேலை - என்ற 
முணுமுணுப்புக்கிடையில்.....

கொஞ்சம் தள்ளி நில்லுமா 
பெண்களுக்குள் சலசலப்பு 
அதுவும் பேருந்து பயணம் 

கொஞ்சல் சிரிப்பைத் தரும் 
சில்லறைகளுக்கு தட்டுப்பாடு 
நடத்துநர் சலித்துக்கொள்கிறார் 
பேருந்து பயணத்தில் 

முன்பக்கம் ஏறும் 
ஆண்மகன்களுக்கு 
அவ்வப்போது வார்த்தையில் 
சவுக்கடி கொடுத்துவிடுகிறார் .....

அங்கே மெல்லிய குரல் 
இளவட்டம்னா அப்படித்தான் பா 

மண்டையில் ஏற 
மறுக்கும் கணித பாடம் 
போல படியில் 
பயணிக்கும் இளசுகளும் 

நடத்துநர் நிலைமை 
பாவம் என்கிறது 
அப்போது தொடங்கப்பட்ட 
நீதிமன்றம் 
பேருந்து பயணம் 

இவங்க இப்படித்தான் பா 
என்கிறது மீசை 
நரைத்த இளைஞர்கள் 

இருக்கை ஐம்பத்து மூன்று
கூட்டல் இரண்டு 
ஆனால் அதிலும் 
சந்தேகம் சிலருக்கு 

அப்படியே கொஞ்சம் 
அறிவுரை வழங்கும் 
ஞானிகள் - வியக்கிறது 
இத்தனை உலகமா என்று 

பேருந்து பயணத்தில் 
நான் இறங்க வேண்டிய 
இடம் இது தான் 

அத்தனையும் பேருந்து பயணம் 
அடுத்தும் நாம் சந்திப்போம் 

மேலும்

ஹலோ டிரைவர் அண்ணே உங்களுக்கு பின்னாடி வர்ற பஸ் டிரைவர் பேசறேன். வண்டில பிரேக் பிடிக்கல நீங்க கொஞ்சமா பிரேக் போட்டீங்கன்னா உங்க வண்டில மோதி என் வண்டிய நிறுத்திக்குவேன்

ப்ளீஸ்ணே

மேலும்

தக்காளியில் கால் தவறி தடுக்கி விழுந்த சிறுவன்!!!!!!!!

சில தக்காளி பழங்கள் நசுங்கின '''''''''''''

தங்கத்தைச் சிதைத்தது போல் சீறினால் தக்காளி விற்ற பாட்டி 🤣🤣🤣🤣🤣🤣🤣

மேலும்

படிப்பு அறிவு தரும் 
அறிவு பணம் தரும் 
பணம் திமிரு தரும் 
திமிரு ஆணவம் தரும் 
ஆணவம் அழிவைத் தரும் 
~அதனால் 
படிப்பை எதிர்ப்போம் 
ரெஸ்ட் எடுப்போம்...😝🙈

மேலும்

என்னம்மா இப்படி பண்றீங்களேமா...!

மேலும்

   வணக்கம்      எங்க கொழந்தைக்கு        நல்ல பேராச் சொல்லுங்க சாமி.

😊😊😊😊😊
சீடா, சீடி குழந்தை எங்கே?
😊😊😊😊
இன்னும் மூ ணு மாசத்தில பொறந்திருங்க சாமி.
😊😊😊😊😊
ஓ.... பெயர் முன் பதிவுக்கு வந்தீங்களா? முன் பதிவுக் கட்டணம் பத்தாயிரத்தைச் செலுத்தீட்டீங்களா?
😊😊😊😊😊
இந்தாங்க சாமி கட்டண ரசீது.
😊😊😊😊😊
சரி நல்ல பேராச் சொல்லறேன். ஆண் குழந்தையா இருந்தாலும் பெ ண் கு ழ ந் தையா இருந்தாலும் நான் சொல்லற ராசியான பேரத்ததான் வைக்கணும்.
😊😊😊😊😊😊
சாமி நாங்க உங்க நீண்ட கால சீடன், சீடியாச்சே. நீங்க சொல்லறத உ யி ரே போ னா லும் தட்டமாட்டங்கமுங்க சாமி.
😊😊😊😊😊
சரி, இப்ப என்னைப் பாருங்கள். நான் என்ன செய்கிறேன்?
😊😊😊😊😊
உங்க விரலை நீட்டி எதையோ சுட்டிக் காட்டறீங்க.
😊😊😊😊😊
என் விரலில் தான் பொறக்கப் போற உங்க குழந்தையோட பேரு இருக்குது.
😊😊😊😊😊
விரல்ல பேருங்களா சாமி?
😊😊😊😊😊
ஆமாம் சீடா, சீடி. உங்க குழந்தைக்கு 'விரல்' னு பேரு வையுங்க.
😊😊😊😊😊
அய்யோ சாமி 'விரலா'.
😊😊😊😊😊
அருமையான இந்திப் பேரு. தமிழர்களின் தற்கால நாகரிகப்படி
இந்தி ப் பேரப் பி ள் ளை களு க் கு வைக் கற துதான் நாகரிகம்.
😊😊😊😊😊
கு ழ ந் தை பிற ந் ததுக்ககப் பற ம் மூன்று மா த ம் க ழி த்து ரண்டு பேரும் கு ழ ந் தை யை நம்ம ஆசிரமத்துக்குக் கொண்டு வாங்க. உங்க 'விரல்' குழந்தை பேருக்கு அர்த்தம் சொல்லறேன். இப்ப நீங்கள் போகலாம்.
😊😊😊😊😊😊
வர்றமுங்க சாமி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Viral = priceles, valuable, rare, precious.

மேலும்

ஆண்கள் என்றாலே ரொம்ப நல்லவங்க

1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்...
2. ஆயாவா, ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்...
4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல...
5. கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்...
6. எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்...
7. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
8. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..? என்று கேட்ப‌தில்லை...
9. படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை...
10. சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்...
11. பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்...
12. தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வது...
13. எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது...
14. அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்...
அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!

மேலும்

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுடைய  ஆதார் எண்ணை தன் காதலருடைய ஆதார் எண்ணுடன்  இணைக்க வேண்டும் .. (குறிப்பு : ஒரு  காதலுக்கு  மேல்  யாரும் பண்ண  மாட்டாங்க  :) ) 

மேலும்

மேலும்...

மேலே