என்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. அந்த நினைப்பில்...
என்னை
நல்லவன் என்று
நினைத்துக்
கொண்டிருந்தேன்..
அந்த நினைப்பில்
மண் அள்ளிப்
போட்டுவிடும்
போலிருக்கிறது
உன் மீதான காதல்...
உன் வீட்டு முன்
காய்ந்துகொண்டிருக்கும்
உனது
ஆடையைத்
திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே
மனசு.....!