எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மொழிபெயர்பாளே....தமிழ் அறிஞர்களே... பார்க் என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி,...

மொழிபெயர்பாளே....தமிழ் அறிஞர்களே...

பார்க் என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி, பொழுது போக்குக்கான இடம் (space for recreation), விளையாட்டு அரங்கம் (An enclosed sports ground), குறிப்பிட்ட பணிகளுக்கான பகுதி (An area devoted to a specified purpose), வாகனங்களை நிறுத்தும் இடம் (An area for motor vehicles to be left in) எனப் பல பொருள்களைத் தருகிறது.

இதில், நாம் பார்க் என்று பெரும்பாலும் பயன்படுத்துவது பூங்கா என்ற பொருளில் மட்டும்தான். Corporation Park என்ற சொல்லை மாநகராட்சிப் பூங்கா என்று சொன்னால் சரி.

ஆனால், Technology Park என்பதைத் தொழில்நுட்பப் பூங்காவாக எப்படி ஆக்கலாம்? போக்குவரத்து காவலர், காரை இங்கே Park செய்யுங்கள் என்று சொன்னால், காரை இந்த இடத்தில் பூங்கா செய்யுங்கள் என்றா பொருள்?

சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தால், ஒரு நாள் பிரண்ட்ஷிப் என்பதைக் கூட நண்பனின் கப்பல் என்று ஆக்கிவிடும் அபாயம் உண்டு அல்லவா...

பதிவு : பசப்பி
நாள் : 5-Jul-14, 11:12 am

மேலே