எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகின் அர்த்தம் அவளை கண்ட நொடி பொழுதில் உணர்ந்தேன்......

அழகின் அர்த்தம் அவளை கண்ட
நொடி பொழுதில் உணர்ந்தேன்...
மஞ்சள் முகத்தில்,
முத்திரை போல பொட்டு ஒன்று
கழுத்தில் விழுந்திருந்த கறு நிற
கயிறும்,காலில் இருந்த வெள்ளி
கொலுசும் கொன்றது
என்னை
அந்த இடத்திலே....
அழகின் ஆணவம் அறிதும் இன்றி
புன்னகை பூத்து,கண்களால்
கைது செய்துவி்ட்டாய்....
இந்த வரிகள் மட்டுமே
எனக்கு
சொந்தமாக்கி, உன்னை
விடவும் மனமில்லாமல்,
மறக்கவும் மறுத்து கொண்டு
ரசிக்கிறேன் என்னவளை....!!!!

பதிவு : லோகேஸ்வரன்
நாள் : 4-Dec-13, 7:26 pm

மேலே