எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று. அணை...

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று.


அணை கட்டும்போதும் ஊழல்-
ஆயுதம் வாங்கும் போதும் ஊழல்.
அலைவரிசை ஏலத்திலும் ஊழல். - அய்யா
A TO Z எல்லா இடத்திலும் ஊழல்.

அதனால் ஆடுவோமே ……..

ஒருநாள் பார்த்தால் ஜாதிசண்டை
மறுநாள் பார்த்தால் மதசண்டை
மாநிலம் தோறும் தண்ணீர்சண்டை
மாநிலத்தின் உள்ளே அரசியல்சண்டை.

அதனால் ஆடுவோமே......

மாநில சட்டசபைகள் மட்டசபைகள் ஆனதடி
மெத்த படித்தவர்கள் வகுத்த நெறிமுறைகள் போனதடி
சிலம்பமும் சடுகுடுவும் தினமும் நடக்குது- சில
சின்ன புத்திக் காரர்களால் அவையே முடங்குது.

அதனால் ஆடுவோமே .....

பாரத நாட்டு பாராளுமன்றம் பாதாள மன்றமாச்சி
பகல் கொள்ளைக்காரர்களின் கைவரிசை கூடாரமாச்சி.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசா போகிறார் மந்திரி
வோட்டுப் போட்டவர் கணக்கு பார்க்கையில் மிஞ்சி நின்றது பட்டினி.

அதனால் ஆடுவோமே...


. சுசீந்திரன்.

முதல் இரண்டு வரிகள்
பாரதியார் வரிகள்
மற்ற வரிகள்
மனதின் வலிகள்.

பதிவு : இன்சிபாலன்
நாள் : 15-Aug-14, 2:10 pm

மேலே