இன்சிபாலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இன்சிபாலன்
இடம்:  புதியம்புத்தூர்
பிறந்த தேதி :  16-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2014
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  0

என் படைப்புகள்
இன்சிபாலன் செய்திகள்
இன்சிபாலன் - எண்ணம் (public)
15-Aug-2014 2:10 pm

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று.


அணை கட்டும்போதும் ஊழல்-
ஆயுதம் வாங்கும் போதும் ஊழல்.
அலைவரிசை ஏலத்திலும் ஊழல். - அய்யா
A TO Z எல்லா இடத்திலும் ஊழல்.

அதனால் ஆடுவோமே ……..

ஒருநாள் பார்த்தால் ஜாதிசண்டை
மறுநாள் பார்த்தால் மதசண்டை
மாநிலம் தோறும் தண்ணீர்சண்டை
மாநிலத்தின் உள்ளே அரசியல்சண்டை.

அதனால் ஆடுவோமே......

மாநில சட்டசபைகள் மட்டசபைகள் ஆனதடி
மெத்த படித்தவர்கள் வகுத்த நெறிமுறைகள் போனதடி
சிலம்பமும் சடுகுடுவும் தினமும் நடக்குது- சில
(...)

மேலும்

முதலில் பார்த்தவுடன் அதிர்ச்சி ஆகிடிச்சி ....நல்லவேளை என் பெயரை போட்டுள்ளீர்கள்....இது போன சுதந்திரதிர்க்காக முக நூலில் எழுதப்பட்டது.....முகப்பில் பேர் போட்டு படித்ததில் பிடித்தது என்று போடுங்கள்.....குழப்பம் தீரும்.....எப்படியோ நன்றி... 15-Aug-2014 8:01 pm
இன்சிபாலன் - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 8:23 am

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

மேலும்

அருமை நண்பரே. நானும் ஒரு சில வார்த்தைகளை எழுதியுள்ளேன் அவையும் கவிதை என நம்பி. 07-Dec-2018 5:02 pm
Thanks karthika 08-Aug-2014 5:26 pm
Thanks frnd 08-Aug-2014 5:26 pm
கவிதை பற்றிய நல்ல பதிவு நட்பே! 08-Aug-2014 5:05 pm
அமிர்தா அளித்த மனுவை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Jul-2014 1:40 pm

ஆயிரம் சட்டம் இயற்றினாலும், ஒப்பந்தங்கள் போட்டாலும் இலங்கை கடற்படை காவலர்களால் நமது மீனவர்கள் கொல்லப்படுவதும் கொடுமைப்படுத்த படுவதும் தீரவில்லை,

இதற்கு அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்

நமது கடல் எல்லையை துல்லியமாக அளந்து சொல்ல வேண்டும், மேலும் நமது மீனவர்களின் விசை படகுகளில் கடல் மையில் தூரத்தை அளக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும்.
படகு புறப்படும் நேரம், அது செல்லும் திசை மற்றும் அது கடக்கும் தொலைவு போன்ற
படகுகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நமது கடற்படை காவலர்களால் கண்காணிக்கப் படவேண்டும்.

அரசாங்கம் இதை செயல் படுத்தப்பட வேண்டும்

மேலும்

இன்சிபாலன் - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 4:19 pm

என் மனம் முழுக்க
உன் நினைவையே
நட்டு வைத்தேன்

உன் நினைவென்னும்
விதையை சுற்றி
மனப்பாத்திகளில்
உயிரையே நீராய்
பாய்ச்சினேன்

என்ன மாயம்,
உன் இதயத்தில்
காதல் பூ
கொத்து கொத்தாய்
பூத்ததே!

மேலும்

நன்றி பாரதி வினய் 18-Jul-2014 9:35 am
கருத்துக்கு நன்றி தோழியே 18-Jul-2014 9:33 am
அப்படியா! அருமை தேவி.. 17-Jul-2014 7:53 pm
அருமை 17-Jul-2014 5:18 pm
இன்சிபாலன் - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 5:12 pm

அலைப்பேசி குறுஞ்செய்தி
சேமித்து வைப்பதில்லை
அன்பு தங்கை
பார்த்துவிட்டால்
ஆபத்தென்று.....
முக நூலில்
புகைபடங்கள்
போட்டதில்லை
அருமை அண்ணன் கண்டுவிட்டால்
ஆப்பு என்று....
என் கணினிக்கு
ரகசிய குறியீட்டு எண் வைப்பதில்லை
அப்பா அறிந்து கொண்டால்
சந்தேக பூதங்கள்
கிளம்புமென்று
நெடு நேரம் யாருடனும்
பேசியதில்லை
அம்மா அறிந்து கொண்டால்
அடுகடுக்காய்
ஆயிரம் கேள்விகள் வரும் என்று...
இப்படியாய் நான்
பார்த்து பார்த்து
பயந்து பயந்து
வளர்த்த காதல்
வீடிற்கு தெரிந்தது இன்று....
பொம்மை தொலைத்த
குழந்தையாய் நான்
தீயிலிட்ட புழுவாய்
என் அம்மா
மின்கோபுர கதிர்வீச்சில்
சிக்குண்ட
சி ட்டுக் குருவியாய்
என்அப்பா
விளக்கில் வி

மேலும்

அருமை நட்பே 23-Jun-2014 9:54 am
மன்னிக்கவும் தோழி ! 22-Jun-2014 7:14 pm
நன்றி மலர். இது வெறும் கற்பனையே. 22-Jun-2014 12:34 pm
அய்யோ...சாமி....எனக்கு திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிறது என்னுடைய அறுபதாம் திருமணத்திற்கு கண்டிப்பாய் அழைக்கிறேன். 22-Jun-2014 8:43 am
இன்சிபாலன் - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2014 10:02 am

ரொம்ப நாளாக நம்மாளு செல்போனுக்கு ஒரு ஆளு மிஸ்டு கால் கொடுத்து கலாய்த்துக் கொண்டே இருந்தார் ..... இதுக்கொரு தீர்வு கட்டணும்னு நினச்சவர்..... தன்னோட சிம் கார்டை மாத்திட்டு, அந்தாளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாரு.....

"அடேய்.... என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... இப்போ நான் நம்பர மாத்திட்டேன்.இனிமே உன்னால ஒன்னும் பண்ண முடியாது".

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே1 02-Apr-2014 12:13 pm
அருமை 01-Apr-2014 3:28 pm
நம்மாளுக்கு செல்போனைப் பற்றி அவ்வளவு தெளிவான அறிவிருந்தது.... 01-Apr-2014 9:08 am
நன்றி ஐயா! 01-Apr-2014 9:03 am
இன்சிபாலன் - எண்ணம் (public)
29-Mar-2014 3:34 pm

புழக்கத்தில் உள்ள பழமொழி விளக்கம்

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

மேலும்

இன்சிபாலன் - எண்ணம் (public)
29-Mar-2014 3:33 pm

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.

மேலும்

இன்சிபாலன் - எண்ணம் (public)
28-Mar-2014 2:45 pm

அன்று அவள் மட்டும் என்னை
பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
இன்று யாரும் அழுது கொண்டிருக்க
மாட்டார்கள் என் கல்லறையில்...!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

மோகன்

மோகன்

குளித்தலை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (34)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (34)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே