எதுகூறி சம்மதம் பெறுவேன்

அலைப்பேசி குறுஞ்செய்தி
சேமித்து வைப்பதில்லை
அன்பு தங்கை
பார்த்துவிட்டால்
ஆபத்தென்று.....
முக நூலில்
புகைபடங்கள்
போட்டதில்லை
அருமை அண்ணன் கண்டுவிட்டால்
ஆப்பு என்று....
என் கணினிக்கு
ரகசிய குறியீட்டு எண் வைப்பதில்லை
அப்பா அறிந்து கொண்டால்
சந்தேக பூதங்கள்
கிளம்புமென்று
நெடு நேரம் யாருடனும்
பேசியதில்லை
அம்மா அறிந்து கொண்டால்
அடுகடுக்காய்
ஆயிரம் கேள்விகள் வரும் என்று...
இப்படியாய் நான்
பார்த்து பார்த்து
பயந்து பயந்து
வளர்த்த காதல்
வீடிற்கு தெரிந்தது இன்று....
பொம்மை தொலைத்த
குழந்தையாய் நான்
தீயிலிட்ட புழுவாய்
என் அம்மா
மின்கோபுர கதிர்வீச்சில்
சிக்குண்ட
சி ட்டுக் குருவியாய்
என்அப்பா
விளக்கில் விழுந்த
விட்டில் பூச்சியாய்
என் அண்ணன்
பாலுக்கழும்
பூனையாய்
என் தங்கை
எப்படி எதிர்கொள்வேன்
இந்த கனத்த மெளனத்தை?
வேற்று சாதி பையனென்று
எப்படி எடுத்துரைப்பேன்
எதுகூறி புரியவைத்து
இழப்பின்றி
சம்மதம் பெறுவேன்...!

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-Jun-14, 5:12 pm)
பார்வை : 96

மேலே