கீழ் படியேயாயினும் பாதக பாழ் படியே

உன் மாடிப்படிகளில் அடிக்கடி
படிக்குப்படி அடிக்கு அடியென
விதிப்படி மிதிப்படுதல் போதாமல்

பொன் திருவதனமதை தாங்கிய
நின் திருவடிகளதன்
மிதியடியின், உயர் போதை நெடியது
போதாதென கருதியோ ??

உன் மலர்மடி தவழ்ந்துக்கிடந்திட
கோடி மலர் கூடி விழுந்தடித்திட
உயிர் மலரே !
உனை விழுந்திட வைத்தமையால்

அது மேல்தளம் அடைவதற்கான
மேல்தள படியாயினும்
வாசல்தனில் நுழைவதற்கான
தலைவாசற்படியாயினும்
சிறு படிகளான இரு படிகளின்
முழுமுதற் கீழ் படியே ஆயினும்
என் மனத்தீர்மானத்தின் படி
அக்தொரு படுபாதக பாழ் படியே !!

எழுதியவர் : ஆசை அஜீத் (18-Jun-14, 5:53 pm)
பார்வை : 88

மேலே