எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினேஷ்::வணக்கம் சதீஷ்், இந்தியா கொடிய Profile pictureரா வச்சிருக்கீங்க.....

தினேஷ்::வணக்கம் சதீஷ்், இந்தியா கொடிய Profile pictureரா வச்சிருக்கீங்க..
உங்க தேச பக்திய நெனச்சி பெருமையா இருக்கு பாஸ்..

சதீஷ்::யெஸ் புரோ..
ஹேப்பி
இண்டிபெண்டன்ஸ் டே.

தினேஷ்::அப்புறம் நாட்டுக்காக என்ன
பண்ண போறீங்க..?்

சதீஷ்::பாரத் மாதா கீ ஜே..்

தினேஷ்::காஸ்மீர்ல இந்திய ராணுவம் மக்களை கொல்லுதுனு சொல்றாங்களே என்ன பாஸ் பண்ணலாம்.்

சதீஷ்::எல்லாம் பாகிஸ்தான் டெர்ரரிஸ்ட் புரோ..்

தினேஷ்::ஈழத்துல கூட தமிழர்கள கொல்லஇந்தியா ஆயுதம் கொடுத்துதே,அதுக்கு இந்தியாவ எதிர்த்து நம்ம குரல் கொடுக்காம வேற யாரு பாஸ் குரல் கொடுப்பாங்க.்

சதீஷ்::அதெல்லாம் பக்கத்து நாடுங்க, நாம என்ன பண்ண
முடியும்.்

தினேஷ்::சரிங்க நம்ம தமிழ்நாட்டு மீனவர்கள 600 பேருக்கு மேல, இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்னுருக்கு. இப்ப கூட தொடர்ச்சியா வலைய கிழிச்சி,படகுகளலாம் ஒடச்சி அனுப்புறாங்க.இந்தியா என்னனே கேக்கல, நாமலாவது கேப்போமா...்

சதீ்ஷ்::எல்லாம் Corruption Politiciansதாங்க காரணம்்..்

தினேஷ்::அடுத்த வாரம் கல்வியை விற்பனையாக்கி தனியார்மயப்படுத்துவத எதிர்த்து ஒரு போராட்டம் இருக்கு வர்றீங்களா...்

சதீஷ்::எல்லாத்துக்கும்ரிசர்வேஷன் தாங்க காரணம்்..்

தினேஷ்::காவிரி டெல்டாவுல விவசாய மண்ணை மலடாக்க மீத்தேன் திட்டத்தை இந்தியா ஒரு கார்பரேட் கம்பெனிக்காக கொண்டு வரப்போகுதாமே..மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாத்த நெறய பேர் போராடுறாங்க.. அதுக்காச்சும் வர்றீங்களா...்

சதீஷ்::எல்லாம் நாட்டோட
Growthங்க..ஜெய்ஹிந்த்..்்

தினேஷ்::்கைய குடுங்க பாஸ்்

சதீஷ்::ஜெய்ஹிந்த்.்
பாரத் மாதா கி ஜே்

தினேஷ்::இந்த நியூட்ரினோ, தண்ணீர் தனியார்மாக்குறது, வடகிழக்கு மக்கள் பிரச்சினை, மரபணு மாற்ற பயிர், விவசாயிகள் தற்கொலை இதுக்கெல்லாம் நாம...்

சதீஷ்::ஈவ்னிங் டிவில புது படம் இருக்கு, சூர்யா பேட்டி வேற இருக்கு பாஸ்..நாளைக்கு பேசுவோங்க, ஜெய்ஹிந்த்.்

தினேஷ்::மக்களின் பிரச்சினைகளுக்காகவும், மக்களுக்கு எதிரா இருந்தா அரசை எதிர்த்தும் பேசுறதுதானே பாஸ் உண்மையான
தேசபக்தி..்

சதீஷ்::நாளைக்கு வீட்டுக்கு வாங்கலேன் பேசுவோம்..ஜெய்ஹிந்த்.்

தினேஷ்::பாஸ் உங்க அட்ரஸ் சொல்லாமலேபோறீங்க.்

சதீஷ்::வீட்டுக்கு வாங்க புரோ.

வந்தே மாதரம்..
தாய் மண்ண்ண்ணே வணக்கம்
்(ஏஆர் ரஹ்மான் சாங்)..

நாள் : 15-Aug-14, 2:52 pm

மேலே