எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈழத்தமிழ் .......................... தமிழ் என்று சொன்னோம் தலைமறைவு ஆக்கினார்கள்...

ஈழத்தமிழ்
..........................
தமிழ் என்று சொன்னோம்
தலைமறைவு ஆக்கினார்கள்

அப்பாவி மக்கள் என்றோம்
அப்படியே சுட்டுப்போட்டார்கள்
சுடுப்போட்டவர்களை அள்ளி எறிந்தார்கள்
கிடங்குகளில்

பாவம் என்று பார்க்கவில்லை
பச்ச பிள்ளைகளை பட்டினி போட்டார்கள்

கைகளில் கண்ணு தூக்கினார்கள் -அதற்க்கு பதிலாக
கைகளில் பிணங்களை தந்தார்கள்

தமிழ் என்று தலைக்கனம் பிடித்தோம் -அது பல
உயிர்களின் தலையை எடுத்தது

ஒவ்வொரு அப்பாவி மக்களும் தங்களை -விட சொல்லி
கத்தியபோது கத்தியவர்களுக்கு முன்னாலே கொன்று போட்டார்கள் -அவர்
உறவினர்களை

ஓடினோம் ஓடினோம் - எல்லோரும்
குண்டுகள் போட்டபோது கைகளை இழந்து,கால்களை இழந்து
ஏன் பல உயிர்களைக் கூட இழந்து

ஒரு பக்கம் குண்டு சத்தம் காதை பிளக்க
இன்னொரு பக்கம் கூச்சல் சத்தம் காதை பிளந்தது

கண்ணனுக்கு முன்னே
தாய் ,தந்தை,சகோதரர்களை இழந்து நின்றபோதும் வலிக்கவில்லை

அவர்கள் இறந்து கிடப்பதைக் கண்டும் சத்தம் இல்லாமல்
கவலைகளை மனதுக்குள் வைத்து தப்பி ஓடினோம் தலைமறைவாக

காலுக்கு கிழே அம்மாவின் பிணம்
அதை தொட கிழே குனிந்தால்
துப்பாக்கி குண்டுகள் நம்மை துளைத்து விடுமோ என்று
பயந்து நடுங்கியது சிறு பிள்ளை

வீட்டில் படுத்திருந்தோம் ,
வீட்டில் கதைத்து கொண்டு இருந்தோம் ,
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம் ,

ஒரு நிமிடத்தில் இழந்தோம்
ஒரு கோடிக்கு மேற்பட்ட சந்தோசத்தை

மழை பொழிந்தது போல் பொழிந்தததுகுண்டுகள்
வெள்ளம் பேருக்கு எடுத்தது போல் இரத்த ஆறு

அனைத்து சந்தோசத்தையும் இழந்து
உறவினர்களை திசைமாறி விட்டு அலைந்தோம்
உயிரைக் காப்பற்ற

சாப்பாடு இல்ல
தூக்கம் இல்ல
கண்களில் கண்ணீர் உடன்
கைகளில் பிணங்களுடன்

உங்களை காப்பாற்றுகின்றோம் என்றார்கள்
நம்பினோம் உயிரைக் காப்பற்ற

அடைக்கலம் ஆனோம்
ஒன்றாக உயிரைக் காப்பற்ற
பெயர் சொன்னார்கள் சொந்த நாட்டிலே
எம்மை அகதிகள் என்று

அவர்கள் பச்சோந்திகள் என்று தெரியாமல்
சில உயிரை காப்பற்ற சென்ற இடத்தில்
பல உயிரை இழந்தோம் கண் முன்னாடி

தப்பித்து சென்றோம்
தூக்கிப் போட்டார்கள் அதே இடத்திற்கு

பெண்களை காமவெறியில் வேட்டையாடினார்கள்
நாய்களைப்போல

கடைசியில் ஓய்ந்ததது
பல உயிர்கள் இறந்தபின்பு

இடத்தை பிடித்து விட்டோம் என்று ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர்
இன்னொரு பக்கம் இடத்தை இழந்து விட்டோம் என்ற கண்ணீர் உடன்

பல நாட்கள் அடைபட்டு கிடந்தோம்
பிறகு பல நாட்களாக தேடினோம் -எங்கள்
குடும்பத்தில் இறந்தவர்களின் உடலை

இப்பொழுதும் தேடுகின்றோம்
தொலைத்த நம் உறவுகளை

இன்னும் டெலிகொப்டர் வந்தால் ஓடுகிறோம் வீட்டுக்கு உள்ளே
பழக்கதோசத்தில் காதை பொத்திக்கொண்டு

உயிர்களை இழந்து
உறவுகள் இழந்து
அலைகிறோம் அனாதைகளாக !

ஓடினோம் அன்று
ஓடுகிறோம் இன்று -இன்னும்
முழுமையான தீர்வு கிடைக்காமல்

இது இரு மொழிக்கு நடந்த சண்டை -கடைசியில்
தமிழ் மக்களை அளிக்கும் சண்டையாக மாறியது

வேறு மொழி மக்கள் என்று எண்ணினார்கள்
ஒரே இலங்கை மக்கள் என்று எண்ணவில்லை .

இனி என்ன நடந்தாலும்
இழந்த சந்தோஷம்
இழந்த குடும்பம்
இழந்த உடல் உறுப்புகள்
இழந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் நம் கண்களில் கண்ணீராக மட்டுமே இருக்கும் ........................................

நாள் : 27-Aug-14, 1:41 am

மேலே