அன்னியர்கள் என்று பார்க்கவில்லை அகதிகள் என்று பார்க்கவில்லை அனாதைகள்...
அன்னியர்கள் என்று பார்க்கவில்லை
அகதிகள் என்று பார்க்கவில்லை
அனாதைகள் என்று பார்க்கவில்லை
அகிலத்தில் வாழும் அனைவருக்கும்
அடிமைகள் என்று எண்ணாமல்
அடைக்கலம் கொடுத்து
அரவணனைத்து காத்து
அள்ளித்தந்த அன்னையே
அன்னைதேரேச
அன்பின் திரு உருவமாய் திகழும்
அன்னையே ...
அல்லும் பகலும் அல்லோலப்பட்டு
கை விடப்பட்டோரை ஒன்று சேர்த்து
அனைவரையும் ஓர் உலகமாக்கிய
அன்னையே ..
உம் பெயரில் மட்டும் அன்னையல்ல
உமது குணத்திலும் நீர்
அன்னையே ...
நோயால் பாதிக்கப்பட்டோரை
சாகும் வரை
சந்தோசமாக வைத்திருக்கும்
அன்னையே ...
தன் வாழ்க்கையை
தனக்காக வாழாமல்
பிறருக்காக வாழ்ந்த
அன்னையே ...
அன்னை அன்னை நீர் அன்னை .................