கருணைத் தொட்டில் கர்த்தரென்னும் சோலையிலே பூத்த பூ கருணையெனும்...
கருணைத் தொட்டில்
கர்த்தரென்னும்
சோலையிலே பூத்த பூ
கருணையெனும்
இலையில் தாங்கிய பூ
அறக்கை தூக்கி ஆசீர்வதிக்க
அரக்க சாத்தான் அழியும்
தளிர்கை தொட்டு தடவ
தொழு நோயும் ஒழியும்.
சந்நியாசம்
என்பதென்ன லேசா
சொந்த சுற்றம் விட்டு
கன்னியாஸ்திரீ
கோலம் கொண்டு
கடவுளுக்கு தொண்டு
ஒன்றேசெய்து
கருணைத்தாய் ஆனாளே
நம்தெரஸா
காணும்
பொருள் யாவினிலும்
கர்த்தர் கண்டாள்
கத்தி
தூக்கும் கள்ளரையும்
கருணையில் வென்றாள்
வலி
நீக்கவந்த
வெண்ணுடை
தேவதை அவளம்மா
வாழ்கின்ற
காலத்தில்
நாம்பார்த்த
கர்த்தர் அவளம்மா.
அவளம்மா .
..அன்பி னம்மா
....அவளே அம்மாம்மா .
சுசீந்திரன்.