----- இப்படிக்கு மக்கள் ---- அப்போது பிரித்தாளும் சூழ்ச்சி!...
----- இப்படிக்கு மக்கள் ----
அப்போது
பிரித்தாளும் சூழ்ச்சி!
இப்போது
சேர்ததாளும் சூழ்ச்சி.?
சூழ்ச்சிக்கான
தந்திரங்களை
தீட்டுபவர்?...
ராஜதந்திரிகள்.!!
அக்கால ராஜாக்கள்
தந்திரங்களை
எதிரிகளுக்காகவே
தீட்டினர்.!
சொந்த மக்களுக்காக
அல்லவே!
சொகுசான
டெல்லி ராஜாக்களே.!?
உங்கள்
தந்திரங்களே ஆயின
அமைப்புகள் !
அமைப்புகளில் நாங்கள்
அபிமன்யுகள்.!!
வடக்கும் வளரவில்லை!
தெற்கும் தேரவில்லை.!!
மேற்கும் மாறவில்லை!
கிழக்கும் கிழிக்கவில்லை!!
இந்தியா ஒளிரும்!
இளைஞர்கை ஒங்கும்!
தினசரி தாள்
விளம்பரங்களில் மட்டுமே.!!
திறந்த போதே
தெரிந்தது.!!!
வணிக பக்கங்களின்
வளர்ச்சிக்கு
அரசியல் பக்கங்கள்
பாடுபட்டன.!
வளர்ந்தவர்
வாங்கினர்
விளயாட்டு, சினிமா
பக்கங்களை.!!!
நாட்டு நடப்புகள்
பக்கங்கள்
பத்தாம்நாள்
நடப்புகள் ஆயின!!
நல்லகாலம்
பிறப்பது
ஜோதிட பக்கங்களில்
மட்டுமே.
ஆனால் ஒருநாள் ..
செய்திகளை
மக்கள் எழுதுவர்.!
சேர்ந்தவர் மாறுவர்.
சேர்த்தவர் ஓடுவர்.
அதுவரை எங்களை
ஆளுக..
ஆடுகளை பார்த்து
அழுக!
பி.கு:
- சரியாக 12 மணிக்கு பதிவு செய்ய ஆசைப்பட்டேன் .
அதனால் கவிதையில் , மன்னிக்கவும் ,எண்ணத்தில் பிழைகள் இருக்கலாம் .
கோர்வை இல்லாமல் இருக்கலாம்,
படித்து தொலையுங்கள் மக்களே .