சேர்த்தவர் : அன்பரசு s, 8-May-14, 4:34 pm
Close (X)

சாலையில் புதிய விதி - படைப்போம்

விட்டுகொடுக்கும் எண்ணம் சாலையில் யாருக்குமே இல்லை. நான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த போது தவறி சாலையில் வரும் வாகனங்களை கவனிக்காமல் சாலையை கடக்க நேரிட்டது - தொடர்ந்து பல வாகனங்கள் வருவதை நான் உணர்ந்தவுடன் பின் வாங்கிவிட்டேன். ஆனால் சாலையில் சென்ற எல்லா வாகனங்களும் நின்றுவிட்டன. அவற்றை போக சொல்லி நான் சொன்ன போதும் - முதலில் என்னை சாலையை கடக்க சொல்லி காத்திருந்துவிட்டு - புன்னகையோடு புறப்பட்டு சென்றார்கள்.

இது இந்தியாவில் நடக்க நூற்றாண்டுக்கு மேல் ஆகும் எனவே நினைக்கிறேன்.

மேலும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றும் பல நல்லவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். என்றைக்கு முடியுமோ அன்றைக்கு செயல் படுத்துவோம்.

சாலைகளில் ஹாரன் அடிப்பதில்லை (ஹாரன் சத்தம் கேட்பது அரிதிலும் அரிது )

எல்லாரும் சைக்கிள் பயன் படுத்த துவங்கிவிட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

நடந்து செல்பவருக்கும் - சைக்கிளில் செல்பவருக்கும் - தனி பாதை இருக்கிறது

விதி மீறுவோரை காவல் துறை கண்ணியமாக நடத்தி - அபராத தொகையை கட்டாயமாக வசூலிக்கிறது

ஜனாதிபதியே ஆனாலும் தப்பை - தப்பாகத்தான் பார்கிறது சட்டம் - தப்பிக்க வழி வகுப்பதில்லை.

இரவானாலும் பகலானாலும் - சிக்னலை மதித்தே மக்கள் பயணம் செய்கின்றனர்.

முன்னிருக்கையில் குழந்தைகளை உட்காரவைப்பது - சட்டப்படி குற்றம். குழந்தைகளுக்கு தனி இருக்கை பின்னிருக்கையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சீட் பெல்ட் அணியாமல் யாரும் பயணிப்பதில்லை.

விதிகளுக்கு உட்பட்ட வேகத்தில் பயணம் இனிதாய் அமைகிறது

காவல்துறை வண்டியை நிறுத்த சொன்னால் - ஓட்டுனர் வண்டியில் இருந்து இறங்க கூடாது. காவலர் தான் இறங்கி வந்து விசாரிக்க வேண்டும்.

ஊனமுற்றோருக்கு பேருந்தில் ரயிலில் அலுவலகத்தில் - என எல்லா இடத்திலும் தேவையான அளவு வசதிகள்.

இதை தவிர மற்ற நல்ல பழக்கங்கள்.

வரிசையில் அரை மீட்டருக்கும் அதிகமான இடைவெளிவிட்டு நிற்பது

சிகரெட் கேட்பவருக்கு பாக்கெட்டோடு கொடுத்துவிட்டு - அவருக்கு எதனை தேவையோ அத்தனையும் எடுத்துகொள்ள சொல்வது.

இருவர் புகைக்க துவங்கும் போது - எதிரில் இருப்பவருக்கு முதலில் பற்றவைப்பது (சட்டப்பூர்வமான எச்சரிக்கை: புகை பழக்கம் உயிருக்கு கேடு )

18 வயதுக்கு கீழ் இருப்போருக்கு மது & புகையிலை பொருட்களை விற்க கடுமையான தடை சட்டம்.

நாய் கடித்தால் - நாயின் உரிமையாளர் 3000 euro வரை நஷ்ட ஈடாக கொடுக்க வைக்கும் சட்டம் ( என்ன எந்த நாயும் கடிக்காம போச்சேன்னு வருத்தம்தான்)

காதலர்கள் பொது இடத்தில பிரெஞ்சு முத்தம் மட்டுமே - பரிமாரிகொள்கிரார்கள். நம் ஊர் காதலர்கள் எல்லாவற்றையும் பூங்காவிலும் - கடற்கரையிலும் - தியேட்டரிலும் ( வேணாம் பிரச்னை திசை மாறுது....)

குழந்தைகளை யாரும் அடிப்பதில்லை - அப்படி மீறி அடிக்கும் பெற்றோர் சிறை தண்டனையில் இருந்து தப்புவதில்லை.

இரவில் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோருடன் - தூங்குவதை அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

இதெல்லாம் நம்மூரில் நடக்கும் நாளை எண்ணி காத்திருக்கிறேன்.

#
லாஸ்ட்டா சொல்றேன் - அவர்கள்
எவ்வளவு போதையில் இருந்தாலும் அடுத்தவர்க்கு - தொந்தரவு தருவதில்லை.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 2 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

சாலையில் புதிய விதி - படைப்போம் மனு | Petition at Eluthu.com



மேலே