அமிலம் கலந்த காதல்....!!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்,
கண்ணில் தொடங்கும்
கல்லறையின் பாதை..!!!
காதல்,
துன்பம் மறைக்கும்
இன்பத்தின் போதை...!!!
காதல்,
பேராசை காட்டும்
இச்சையின் மாயை..!!!
காதல்,
நட்பை கெடுக்கும்
உடைந்த கண்ணாடி பேழை..!!!
காதல்,
உணர்ச்சி புகுத்தி
உயிரை பிடுங்கும் கோழை..!!!
காதல்,
நம்ப வைத்து ஏமாற்றும்
சாகச தந்திர வேலை..!!!
காதல்,
புரிந்தவர்களுக்கு சொர்க்கத்தையும்,
திரிந்தவர்களுக்கு நரகத்தையும்,
மாற்றி மாற்றி காட்டும்
நவீன கால எமன்...!!!
காதல்,
பணிய மறுத்தால்
அமிலம் ஊற்ற நினைக்கும்
முட்டாள்களின் செயல்...!!!
காதல் காதலாக இருப்பின்,
காதலும் உணர்ச்சியுள்ள
கடவுள் தான்...!!