உன்னைப்பற்றி தெரிந்து கொள்..!!!
![](https://eluthu.com/images/loading.gif)
எத்தனையோ கனவுகள்,
எண்ண முடியாத லட்சியங்கள்,
உன்னால் எதையும் செய்ய முடியும்-
என்ற குருட்டு நம்பிக்கையில்
கல்லூரி வாழ்க்கை..!!
படிக்கும் போது நன்றாக படிக்கிறேன்
என்ற திமிரு,
உனக்கு எல்லாம் தெரியும்
என்ற தலைக்கணம்,
உன்னையும் விட்டு வைக்காது..!!
உனக்குள் இருக்கும் திறமைகளை
ஒன்றுவிடாமல் அழிக்க
ஆயுதம் தேவை இல்லை,
நான் என்ற கர்வம் போதும்..!!
கல்லூரி வாழ்க்கை முடியும் வரை,
உன் உண்மை முகம் மறைத்து
போலி முகம் மட்டுமே காட்டும்
உனக்குள் இருக்கும் மனக்கண்ணாடி..!!
ஒன்றும் தெரியாதவன் தான்
எல்லாமே தெரியும் என்பான்..!!
உன் தகுதிகள் பற்றி
உனக்கும் ஒரு நாள் தெரியும்..!!
வேலை தேடி ஏமாறும் போது தான்
உண்மையில் நீ யார் என்பதும்,
உன் தகுதி என்னவென்பதும் தெரியும்,
நான் என்ற தலைக்கணம் மறையும்,
எல்லாம் தெரியும் என்ற ஆணவம் குறையும்..!!
எல்லாம் தெரிந்தவனும் இல்லை,
எதுவும் தெரியாதவனும் இல்லை,
உன்னை நீ தெரிந்துகொண்டால்
எதிர்பார்ப்புகளும் இல்லை,
ஏமாற்றங்களும் இல்லை..!!