உள்ளம் கொள்ளை போகுதடி...!!!

உள்ளம் கொள்ளை போகுதடி...!!!

யாரோ,அவள் யாரோ,
தெரியாமல் தவித்தேனே
தெரிந்து கொள்ள துடித்தேனே,
உயிருக்குள்ளே ஒரு சத்தம்
அதை புரிந்துகொள்ள வரும் யுத்தம்..!!!

உயிராய் உன்னை சுமந்து
இவ்வுலகம் சுற்றி பறப்பேன்..!!
எதிரே எமன் வந்தாலும்
எவன் என கேட்பேன்..!!

நான் பார்க்கும் பூவெல்லாம்
உன் பெயர் எழுதியே பிறக்கிறதே,
எதிர்வரும் முகமெல்லாம்
உன் முகமாய் தெரிகிறதே..!!

முட்டாள் என நீ சொல்லி கேட்க
தவறுகள் செய்தே நான் கிடக்கிறேன்,
என்னை திட்டாத உன் வார்த்தை எல்லாம்
வேற்று மொழியாகவே பார்க்கிறேன்..!!

இறகு தோற்கும் மெல்லிய சிரிப்பும்,
வந்தவுடன் மறையும் வானவில் கோவமும்,
காற்று நுழைய முடியா அரவணைப்பும்,
இதயம் படபடக்க செய்யும் சின்ன தீண்டலும்,
நீயின்றி நானெங்கே போய் உணர்வது..!!

உள்ளம் கொள்ளை போகுதடி,
நீ எங்கோ இருந்து கொண்டு
என்னை ஒன்றுமில்லாமல்
ஆக்கியது போதுமடி...!!!

எழுதியவர் : மனோ ரெட் (6-Jul-13, 11:24 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 120

மேலே