இதுபோல் காதலி கிடைக்குமா...????

காதல் கொஞ்சம் வேண்டும்,
சிறு கண்ணீர் எனக்காக வேண்டும்,
என்னை எப்போதும் நினைத்து
உன் நிமிடம் கழிக்க வேண்டும்,
உயிர் என்னை விட்டு போனாலும்
என் நினைவில் நீ வாழ வேண்டும்..!!

யாரும் என்னை நினைக்காத நேரம்,
உன் நினைவால் அந்நேரம் நிரப்பி
என்னை ஆட்கொள்ளவேண்டும்..!!
பூங்காற்றும் என்னை தேடி
உன் அன்பை சொல்ல வேண்டும்..!!

பனி படரும் காலையிலே
தினம் புதிதாய் என்னை எழுப்பி
என் நாட்களை நகர்த்த வேண்டும்..!!
ஒருநொடியில் உன் சமையல்
சுவையில் உலகை இழுத்து வந்து
என் வீட்டை நிரப்ப வேண்டும்..!!

உணர்வுகளில் உன் கவிதை
உயிர் வழியே என்னை சேர
நீ பாடும் அந்நேரம்
நான் என்னை இழந்து தவிக்க வேண்டும்..!!
சிறு அசைவில் நீ சிரிக்க
உன் தயவில் நான் சிரித்து
இப்பூமி விட்டு பறக்க வேண்டும்..!!

தவறாக எதை கேட்டாலும்
தேவை எதுவென நீ அறிந்து
மிக சரியாக என்னை
தோற்கடிக்க வேண்டும்..!!
பூ உறங்கும் இடைவெளியில்
நீ விழித்து என் அருகில்
என் தூக்கம் ரசிக்க வேண்டும்..!!

எல்லாம் நான் தான் என்று
உன்னை என்னிடம் தந்து
என் இதயமாய் நீ துடிக்க வேண்டும்..!!
நிலவு என்னை தீண்டினாலும்
நிஜமாய் கனவு என்னை துரத்தினாலும்
உன் காதல் கொண்டு வெல்ல வேண்டும்..!!

இப்படியாக நீ இருந்தால்
நீ வியக்க நானிருந்து
உன்னில் என்னை புதைப்பேன்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (9-Jul-13, 3:12 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 142

மேலே