தூக்கம் தொலைந்த வீதி.

தூக்கம் தொலைந்த வீதி.

என்னை பார்க்க
அவள் வரவே இல்லை,
நடு சாமம் ஆகிவிட்டது
எங்கே போய்விட்டாள்.

இரவு பத்து மணிக்கெல்லாம்
வந்துவிடுவாள் தினமும்.
எனக்கோ ஒரே குழப்பம்
எங்கே போயிருப்பாள்,
பாதை மாறி போய்விட்டாளோ

நான் சாப்பிடும் வரை காத்திருப்பாள்.
அவள் மடி மீது நான் தலை வைக்க
அவள் கதை சொல்லி தாலாட்டு பாடுவாள்.
இன்று தலையணை மட்டுமே என்னோடு.
என் வீடு பூட்டிய வீடாய் இருந்தாலும்
எளிதாய் உள்ளே வருவாள்.
நான் கதவை திறக்க வேண்டுமென்பதில்லை
அவளாய் கண்டு புன்னகைத்தலே போதும்.
எனக்காக கதை சொல்லுவாள்.
என்னை அணைத்து கொண்டே
எனக்காக தாலாட்டு பாடுவாள்.
அவள் சொல்லும் கதைகளுக்கு கனவு என்று பெயர்.
அவள் தாலாட்டிற்கு உறக்கம் என்று பெயர்.
அவளுக்கு பெயர் தூக்கம்.

அவளை தேடி யாருமற்ற
அந்த வீதிகளை கடந்து
சாலையிலே நடந்து
அவளை தேடி விரைந்தேன்.

இரவில் வரும் வாகணங்களை கடந்து
நீண்ட நேரம் கழித்தே
அந்த கருவேல மரத்தடியில்
அவளை பார்த்தேன்.

அவள் தனிமையில் பேசிகொண்டிருந்தாள்.
அவளுக்கு என் மீது வருத்தம்,
இரவில் அவளை நான்
சில நாட்களாகவே
கண்டுகொள்ளவே இல்லை,
முகபுத்தகம் பார்த்து பார்த்து
அவளை பார்த்து கொள்ள மறந்துவிட்டேன்.
அதனாலேயே அவளுக்கு என் மீது வருத்தம்.

மெதுவாய் அவளை தொட்டேன்
என் வாசனை அறிந்து
நான் தான் என தெரிந்து
என்னை நிமிர்த்து பார்க்க மனமில்லதவளாய்
என் மீது சாய்ந்து கொண்டாள்.

வீடுவரை என்னுடன் பேசாமலே வந்தாள்.
நானும் ஏன் என்று கேட்கவில்லை.
என் வீட்டை அடைந்தஉடன் மெதுவாக
என்னை பார்த்து புன்னைகை பூத்தாள்.

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (9-Jul-13, 3:57 pm)
பார்வை : 217

மேலே