வரிச்சலுகை

அதிகாரி: ஒங்க படத்துக்கு இஸ்த்துக்குனு கம்-னு தலைப்பு வச்சிருக்கீங்க. அதனால வரிச்சலுகை தரமுடியாது.

படத்தயாரிப்பாளார்: என்ன சார் இப்ப்பிடி சொல்றீங்க. சிலர் படத்தின் பேர மட்டும் தமிழ்ப் பேரா வச்சிட்டு, தமிழ் பண்பாட்டையும் மொழியையும் சீரழிக்கராங்க, இங்க இருக்கிறவங்க்ளுக்கு வாய்ப்புத் தராம இறக்குமதி செஞ்சு தமிழ் தெரியாத ஆட்களுக்கு வாய்ப்புத் தந்து தமிழை தப்புத் தப்ப உச்சரிக்கறவங்கள எல்லாம் பாடவச்சும் நடிக்க வச்சும் பாக்கறாங்க. அந்தப் படத்துக்கெல்லாம் வரிச்சலுகை தர்றீங்க. சென்னை நகர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்த எங்க படத்துக்கு வரிச்சலுகை இல்லன்னு சொல்றீங்க இது நியாயம் இல்லை சார்.

அதிகாரி: ....................!!!!!!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (9-Feb-14, 9:08 am)
பார்வை : 241

சிறந்த நகைச்சுவைகள்

மேலே