அது ஒரு மழைக் காலம் - தொகுப்பு

அது ஒரு மழைக் காலம்

15-11-2015 முதல் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது... அவ்வப்பொழுது தோன்றும் எண்ணங்களை கவிதையாகவும், உரை நடையாகவும் முக நூலில் பதிய அதன் தொகுப்பு ஒரு வண்ணக் கோலமாக இருக்கிறது....
***
இப்பொழுது வெய்யில் அடிக்கிறது....

வெய்யில் தொடரவேண்டும் என்பது பலர் விருப்பம்...

தொடருமா என்பது இயற்கையின் முடிவு....

அதுவரை கீழே என் தொகுப்பு....
----- முரளி 07-12-15 10-10 am
****

கனமான மழை பொழிகிறது
சென்னை மிகக் குளிரடிக்குது
ஜன்னல் வழி முதல் மாடியிலிருந்து
பார்ப்பது இதமாகத்தான் இருக்கிறது
இன்னல் படுபவர் நிலை நினைக்க
கொஞ்சம் மனக்கவலை கொண்டாலும்
இம்மழை ஏங்கித் தவிக்கும் எமக்குத்
தேவையே எனினும் எங்குசென்று இம்
மழைத்துளி சேரும்.... ?
தார் ரோட்டில் சீறிப் பாய்ந்து
கடல் போய்சேர்ந்துவிட்டால்
நாளை எங்கள் Bore Pump-இன் கீழ்
முனைக்கு எட்டுமா...?
----- முரளி 15-11-15 10-10 am
****

அடை மழை தொடர்கிறது......
மிக்சரில் கலந்த வேர்கடலை
முந்திரி தேடிப் பிரித்த பின்னும்
அடை மழை தொடர்கிறது
அடுத்து என்னைத் தேடு
என்கிறது வறுத்த பொட்டுக்கடலை
அடை மழை தொடர்கிறது
வரிசையில் காத்திருக்குத் தேட வறுத்த
அவல் கார பூந்தி சற்று பெரிய ஓமப்பொடி
அடை மழை தொடர்கிறது
எல்லாம் தேடிய முடிவில் துகள்கள்
சற்று இனிப்பும் உப்பும் காரமாக
அடை மழை தொடர்கிறது
ஒன்றாய் இருந்ததைப் பிரித்துச்
சுவைத்தாகி விட்டது தனித்தனியாய்
அடை மழை தொடர்கிறது
எல்லாம் தேடிப் பிரித்த பின்
எதைத் தேடி அசைபோடுவது
அடை மழை தொடர்கிறது
--- முரளி 15-11-15 2-10 pm
****

எனக்கென்னமோ இந்தமுறை
ரமணன் சரியாச் சொல்லிட்டார்னு
தோணுது....!
--- முரளி 15-11-15 9-12 pm
****

எவ்வளவோ நிலப்பரப்புள்ள நாட்டிலும்
மக்கள் ஏன் அதிகமாக கடற்கரை
ஓரம் வசிக்கிறார்கள்?
--- முரளி 16-11-15 11-20 am
****

சொல்லிவிட்டு வா
மழையே மழையே இனி நீ
எங்கே எப்பொழுது எவ்வளவு என
முன்னறிவித்து பின் வா
நாங்கள் நின் வருகைக்காக
சாக்கடை மழைநீர் வடிகால்
ஏறி குளம் தயார்நிலை வைப்போம்
மற்றைய நாட்கள் எமக்கு
ஏரி குளங்கள் குடியிருக்கவும்
சாக்கடை வடிகால்கள் குப்பை
நெகிழிகள் நிரப்பவும் தேவை
எங்கள் தயார் நிலைகண்டு
நெகிழ்ந்து உன் கொடையை
தாராளமாக்காதே எங்கள்
கொள்ளளவு குறைவே
நெடு நாட்கள் ஆகிறது
உன்னை நம்புவதை விட்டு
காசு வீசி எறிந்தால்
நீர் வரும் என்ற
பிரமையில் உள்ளோம்
இங்கே உனைத்தேக்க ஊரில்
குளமும் ஏரியும் வீட்டில்
கிணறும் இல்லை
நீ வீம்புடன் கொட்டித் தந்தால்
நாங்கள் விரைவாய் வீதி வெட்டி
உன்னை சாக்கடையுடன் கலந்து
விரட்டிடுவோம் உன் பிறப்பிடத்திற்கு
அந்தச் சமரில் வென்றோம் என
மார்தட்டியும் கொள்வோம்...
ஆதலின் சொல்லிவிட்டு வா
சொகுசாய் சிறிது தூவிச் செல்
நாங்கள் காசுக்கு வாங்கிக் கொள்வோம்
கடலிலிருந்து பிரித்துக் கொள்வோம்
அண்டை மாநிலத்திலிருந்து கெஞ்சிக்
பிச்சைக் கேட்டுக் கொள்வோம்
--- முரளி 16-11-15 4-15 pm
****

மழை நின்று விட்டது
வீதியில் மெல்லிய நீரோட்டம்
முடிந்தவரை கூட்டுச் சேர்ந்து
பயணிக்கின்றன பள்ளம் நோக்கி
முயலாதவை பூமி புகலாதவை
நாளை வெய்யோனுக்கிறை
முயலு அல்லது தாழ்ந்திரு
சேரும் உன்னிடம் எல்லாம்
------- முரளி 17-11-15 12-34 pm
****


Sunshine.....
Sun is shining brightly....
----- முரளி 18-11-15 10-25 am
****


eluthu com kavithai .272216.
காலைச் சாரல் 20 - மழை
----- முரளி 19-11-15 10-25 am
****

மீண்டும் மழை
கன மழை
தொடர் மழை...!
----- முரளி 19-11-15 3-40pm
****

இம்முறை வெள்ளத்தால் அவதிப்பட்டவர்கள் அடுத்தமுறையும் இதுபோல் அவதிப்பட தயாராகிவிட்டார்களா அல்லது மாற்று ஏற்பாடு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா?
அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
----- முரளி 20-11-15 9-30 am
****

வெய்யில் அடிக்கிறது
வெண்மேகம் சிரிக்கிறது
வெள்ளம் தந்த இன்னல் கண்டு...
-- முரளி 20-11-15 12-30 pm
****

ஊருக்குள்ள தண்ணி நிக்க
ஊட்டுக்குள்ள தண்ணி நிக்க
ஏரிக்குள்ள தண்ணி எங்க
சொல்லு கிளியே......
மாமா மாமா உன் வீடுதானே
முன்ன ஏரி.... ஏரீன்னு
அறிவேனே.....
--- முரளி 20-11-15 6:00 pm
****

மீண்டும் மழை
இடி மின்னலுடன்
மழை ....
----- முரளி 20-11-15 8-50 pm
****

விட்டு விட்டு மழை
பொழியுதே நாளையும்
விட்டு விடுவாங்களா லீவு?
----- முரளி 22-11-15 1-00 pm
****

சென்னை மழை
-------------------------

மேகச் சமிக்சைகள்
மழை வருமெனக் கூற
மின்னல் கீற்றுக்கள்
இடி வர முன்னோட்டமிட
காற்று ஆரவாரம் செய்ய
புழுதி எக்காள மிட
வான் வழி வந்த
காணொளி கண் மூட
இருட்டை இரட்டிக்க உடன்
மின் தடை ஏற்படுத்த
பிள்ளைகள் துள்ளியே
கள்ளமின்றிக் குதிக்க
............
முன்பெல்லாம் .......
நம்பிக்கையுடன் குடையின்றிச்
சென்ற அங்கிள் இப்பொழுது......
வீட்டுக்குள் முடங்கி
candy crush -ல் மூழ்குகிறார்....
-----முரளி 22-11-15 7-30 pm
****

'லீவு விடு' என்று கேட்டு
சொல்லி அடித்த மழை
மழலையின் நண்பன்
லீவு விட்டவுடன் சற்று
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது
--- முரளி 22-11-15 11-00 pm
****

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாடிய மழையால்
இங்கே புது தீவு
லீவு லீவு லீவு
இது ஒரு புதிய
தீவு தீவு தீவு
------ முரளி 23-11-2015 6-15 a.m.

சீறிய மழை
சீரிய முறையில்
சிறு மதியை
சீர் தூக்கிச் சென்றது
அதனுடன் கழிவுநீர்
கலப்போரை!
------ முரளி 23-11-15 1-30 pm
****
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா....

"யோவ் அதெல்லாம் மின்ன
இப்ப படகுதான்"
---- முரளி 23-11-15 1-55 pm
பி.கு: எழுதிக் கொண்டிருக்கும்போதே பின்னி எடுக்கத் துவங்கிவிட்டது..... கன மழை.....
****

வீரியமான மழை
சற்று விரோதமாகவும்
தொடருவது சற்றுக்
கலக்கம் தருகிறது..

நீர் நிலைகள் நிரம்பிய
நிலையில் காட்டிடும்
சாகசம் மொட்டைப்
பிட்ச்சில் அடிக்கும்
நாலு சதம் போல்
யாருக்கு லாபம்....

நிறுத்து என்று
நம்மைக் கெஞ்சும்
நிலைக்கு தள்ளிடும்...
---- முரளி 23-11-15 5-17 pm
****

வ(வி)சனக் கவிதை

நான் .......

உங்கள் ஊருக்கு வந்தேன்
உங்கள் வீதிக்கு வந்தேன்
உங்கள் வீட்டுக்கும் வந்தேன்
அபரிமிதமான அன்பினால்
பெருக்கெடுத்து வந்தேன்

ஆனால் நீங்கள்.....
என்னை வெறுக்கிறீர்கள்
உதாசீனப் படுத்துகிறீர்கள்
வேண்டாம் என்கிறீர்கள்
கழிவு நீருடன் கலந்து
கடல் நோக்கித் தள்ளுகிறீர்கள்

நீங்கள் என் வீடெல்லாம்
குடி வந்தீர்களே நான்
வந்தால் ஏன் விரட்டுகிறீகள்

மிகவும் வருந்துகிறேன்

இனி வரமாட்டேன்
தூரச் செல்கிறேன்
உங்களை விட்டு

தேடாதீர்கள்.......
---- மழை 24-11-15 10-10 pm
****

பத்து நாட்களாக
போக்குக் காட்டிய
சூரியன் இன்றே
முழு நேரம் வேலை
பார்த்திருக்கிறான்

முழு நிலவும்
முகம் காட்டினாள்
--- முரளி 24-11-15 6-30 பம்

நாள் முழுக்க
நீர் உறிஞ்சி
ஆதவன் களைப்பாய்க்
காண்கிறான்

எங்கே ஜலதோஷம்
பிடிக்குமோ என
பூமி மகள் கவலை

சந்திரன் சிரிக்கிறாள்
குளிராய்....!

கொசுக்களின் ரீங்கார
இன்னிசை....!

-----முரளி 25-11-15 7:10 pm
****

எழுதியவர் : முரளி (23-Nov-15, 10:21 am)
பார்வை : 179

மேலே