பசுமை விரும்பியின் ஆதங்கம்

கற்பனையில் நூறாக எழுதலாம்
காகிதத்திலும் கணினியிலும்
பசுமைக் கவிதை !
உண்மையில் பசுமைக் கவிதை
நீ நிலத்தில் சிந்தும் வியர்வை !

நெல்லுயரும் நீர் வயல்கள்
மண் வாழ்ந்திட வாழும் கழனிகள்
கட்டிடம் கட்டி கண்ணீர் வயல்கள் ஆகலாமா ?

நீ காகிதத்தில் எழுதி வெளியிடும்
ஒவ்வொரு புத்தகமும்
பசுமை மரத்தின் கல்லறையில்
எழுதி வைத்த இரங்கல் கவிதை !

------கவின் சாரலன்

படம் வலைக் குறிப்பு : RICE TERRACES IN PHILIPPINES
படத்தைப் பெரிது பண்ணிப் பார்க்கவும் .
கழனி அழித்து கட்டிடம் வளர்க்கிறார்கள் இங்கே.
கழனியை கட்டிடம் போல் வளர்க்கிறார்கள் ஃபிலிபைன்சினர்.
இது பற்றி மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-15, 9:39 am)
பார்வை : 115

மேலே