வளர்க வள்ளிக் கிழங்கே

மரவள்ளி ஒரு முயற்சி ---
இந்தத் தலைப்பில் பசுமைக் கவிஞர் இராசேந்திரன் எண்ணத்தில்
தன் பசுமை அனுபவத்தை பகிர்கிறார் . படிக்கவும்

அதில் நான் சொன்ன கருத்தும் கவிதையும் . உங்களில் பசுமை விரும்பிகள்
பலர் இருக்கக் கூடும்.அதற்காக இங்கே மீண்டும் :---

தெரிந்ததோ தெரியாததோ எல்லாவற்றையும் குப்பைகளை தொட்டியில் கொட்டுவதுபோல் கணினி பக்கங்களில் குவிக்கும் காப்பி பேஸ்ட் கணினி கலாச்சாரத்துக்கு இடையில் தானே நட்டு பேணி வளர்த்த மரவள்ளிக் கிழங்கு காய்த்து கிலோ கிலோவாய்த் தொங்கும் அழகை பார்த்து ரசித்து "உண்மையான அனுபவத்தை"
பகிர்ந்து கொள்ளும் பயிர்த் தொழில் பசுமை போற்றும் இராசேந்திரனை
மனமுவந்து பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் .

கோரிக்கை அற்று கிடக்குது அண்ணே
இங்கே வேரில் பழுத்த பலா ----என்ற பாரதி தாசனின் வரிகள் நினைவுக்கு வந்தது.

போட்டுப் பாரடா தோட்டத்தில்
மரவள்ளி
காய்த்துக் குலுங்கும்
கிலோ கிலோவாய் கிழங்கு !
ரசித்துப் பாரடா புசித்துப் பாரடா
வள்ளியைக் கட்டியணைத்த முருகனும்
வந்து வாழ்த்துவானடா !
---அன்புடன், கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-15, 9:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே