காட்சிப் பிழைகள் - 49
(மன்னிப்பு மடல்)
என் இனிய சகாக்களே! நீண்டதொரு கஜல் எழுதி உங்களையெல்லால்
கழுத்தறுப்பு செய்தமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன்!
ஊர் உலகிலில்லாத வார்த்தைகளையா இவன் எழுதிவிட்டான் என்று
நீங்களெல்லாம் போரடிக்க காரணமானதால் வெட்கப்படுகிறேன்!
என் இந்த கஜல் படைப்புகள் உங்களால் விரும்பப்பட்டால் அதன் வெற்றி முழுதும் கஜின்னா-வையே சாரும்!
என் இந்த கஜல் படைப்புகள் உங்களால் வெறுக்கப்பட்டால் அதன் தோல்வி
முழுக்க முழுக்க சாய்மாறனையே சேரும்!
இனி நன்றியுடன் என் படைப்பை உங்கள் முன் படையல் இட, தலைவாழை இலைவிரித்து தலைவணங்கி காத்திருக்கிறேன் உங்கள் விமர்சனம் வேண்டி.! சாய்மாறன் 9841322135
_________________________________________________________________________________________________
1 (ஒருதலை ஓலம்)
கைக்கிளை கொண்டேன் உன்மேல் அன்பே
சைக்கிளை ஓட்டி வந்தேன் உன்வாசல் முன்பே
மதிக்கலை நீயும் என்னைத் துளியும் - இருந்தும்
சளைக்கலை என்மனம் உன்னையடையச் சிறிதும் !
உனக்கில்லையே ஏனோ என்மேல் ப்ரியம்…?
எனக்கில்லையா நல்ல பாரம் பரியம் ?
கணக்கில்லையே உனக்கான எந்தன் கவியும்
படிக்கலையா நீ - பிரித்து எதையும்…?
எனக்கில்லை பெண்ணே பிற பெண்மேல் விருப்பம்
பிடிக்கலையா உனக்கு - எனது காதல் விருத்தம்
நானில்லையா உனக்கு ஏத்தப் பொருத்தம்..?
ஞானி - யில்லை நான் - மன்மத வர்க்கம் !
நானோ உன்னை என்னுயிரென்றேன்! நீயோ என்னை மண்கயிரென்றாய்!
உயிரே உன் கருவறையில் - தயிராய் நான் குளிர் தருவேன் !
காதல் என்கிற வைரத்தை - மோதச் செய்து இன்பத்தை
சாதல் வரைக்கும் அனுபவித்து - பாதகமின்றி பயிற் செய்வோம் !
ஆதாம் ஏவாள் மறுத்திருந்தால் - காதல் என்பது வளர்ந்திருக்காது;
சீதா இராமனை வெறுத்திருந்தால் – அயோத்தி புகழை அடைந்திருக்காது;
இராதா கிருஷ்ண லீலைகள் - இரகசியம் சொல்லும் இரதங்களில்
இராத்திரி நேர பூஜைகளில் - தத்துவம் கொட்டும் மெத்தைகளில் !
வீதியெங்கும் ஒளி வட்டம் – என் நாடி நரம்புகளில் நீ மட்டும்
வீணைக்கொண்டு மீட்டுகிறாய்! - தினம் விரகத்தீயை ஏற்றுகிறாய் !
நிலவின் பொலிவு உன்முகத்தில் – உன்னை உளவுபார்க்கும் சமூகத்தில்
என்னை மட்டுமே நீ ஏற்க: பெண்ணே எனக்கு வரம் கொடு…!
தீயின் நாக்கு என்னைத் தீண்டுமுன் – உன்வாயின் வாக்கால் என்னை அலங்கரி !
நான் பாடையில் படுத்துப் போகும்முன் - நீ என்னை காதல் செய்து வசீகரி..!
பெண்ணை பேயென்று சொன்னாலும் - உன்னை தாயென்று நான் சொல்வேன்!
அன்னையர் தினத்தில் உனக்காக - ஆலயங்களில் நான் தொழுவேன் !
சூரிய குடும்பக் கோள்களின் - ராசி பலன்கள் வாழ்வினில்
ஆசிகள் வழங்கும் நாள்தோறும்! - என்னாசைகள் விரைவில் நிறைவேறும்!
மாயைகள் நிறைந்த உலகத்தில் - மன்மதங்கள் புரியா ஜென்மங்கள்
கோழைகள் என்றே முன்மொழிய முனிவர்களே முன்வாருங்கள்…!
ஊமை மொளனம் ஏனம்மா ? உன் உணர்வை எனக்கு தானமாய்
தருவதில் தயக்கம் ஏனம்மா..? நான் தருதலை இல்லை - கல்விமான்..!
கணினி கலையில் நான் விஞ்ஞானி - என் ஜனனி உனக்கு நான் தீனீ
தினமும் இடுவேன் மகிழ்வாய் நீ ! இன்னொரு ஜென்மம் தரும் நமக்காய் புவி !
****************************************************************************************************************************
2 (மடிகணினி காதலி)
“மின்னஞ்சல் மேனகையே..! உன்நெஞ்சில் சரணடைய
மடல்களாய் அனுப்புகிறேன் மடிகணினி வழியாக…!”
முகநூலில் உன் புகைப்படங்கள் தினம் விதவிதமாய் வருகின்றது
அதற்கான லைக்கிங்கில் என் கைவிரல்கள் பதிகின்றது
குறுஞ்செய்தி அனுப்ப வசதியாய் தாயேன் உன்கைபேசி எண்ணை..!
பதில் செய்தி அனுப்ப வசதியாய் பெறுவாய் என்கைபேசி எண்ணை..!
கூகுளில் கண்டுக் கொண்டேன் உன் வசிப்பிட முகவரி
யாகுவில் அறிந்துக் கொண்டேன் நீ பிறந்த மாதம் – ஜனவரி!
ஜனவரியில் பிறந்தவர்கள், ஜகத்தின் முதல் உறுப்பினர்கள் !
ஜனனியே உன்னால் என்னுள் தினந்தோறும் சொப்பனங்கள்..!
சமூக வலைதளங்கள் - நலப்பணியில் உற்ற சேவகர்கள் !
கணினி காதலர்கள் - விரல்நுனியில் உலகம் அறிபவர்கள் !
டுவிட்டரில் ஸ்டேடஸ்ட் போட்டு - யூ டீயூபில் டூயட் பாடும்
கம்ப்யூட்டர் காலமிது…! பியூட்டீயே காதல் பிச்சை இடு…!
************************************************************************************************************************
3 (என்னை நம்பி வா)
ஒரு சிரமமின்றி என் கரம் பற்று - நம்
கருமங்கள் காணாமல்போக வாய்ப்புண்டு!
என் உழைப்பின்மீது நம்பிக்கை வை – உன்
பிழைப்புக்கு நான் முழு கியாரண்ட்டி….!
செல்லறித்த செப்பேடே என்றாலும்
அதற்கு எப்போதுமே மதிப்புண்டு..!
கடல் - கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறதே எதனால்….?
கடல் காதலிக்கும் மீன்கள் – மீனவ வலைகளில் சிக்குவதாலோ..?
தினமும் அதர்மயுத்தம் நடத்திக்கொண்டே இருக்க
காதலொன்றும் முரட்டுவகை மிருகயினம் அல்ல..;
தாலி கட்டும்வரை மட்டுமே காதலிக்காமல்
தாலி கட்டியப்பிறகும் காதலிப்பதே தெய்வீக காதல்!
இன்ப பிரதேசத்தின் மர்ம துவாரங்கள் நடத்தும்
யுத்த காண்டம்தான் காதலின் ஜீவ தாண்டவம்.!
யுவன்களும் யுவிகளும் யுகம்யுகமாய் - காதல்
ஜகத்தினில் நிகழ்த்திடும் ஜனத்திரள் சாம்ராட்ஜியம்!
அடியே என் சம்யுக்தா ! உன் கொலுசொலியில் சரணடைய
நீ செல்லும் தெருவெங்கும் என் நடைபயணம்..!
சலீமின் சம்மதத்தோடா அனார்கலிக்கு உயிருடன் ஜீவசமாதி..?
ஷாஜகானின் கொடுமைகளுக்காகவா மும்தாஜிக்கு தாஜ்மகால்…?
நான் சலீமும் அல்ல - ஷாஜகானும் அல்ல;
காதலியை பறிகொடுத்து நினைவகம் அமைப்பதற்கு......!
உன் எழில் முகம் - என்னுள் ஏற்படுத்தும் ஏகாந்தத்தை
என் கண்வழியேப் பார்…!உன் கண்கள் காதல் கொள்ளும்!
வறுமைப் பேய்களை விரட்டுவதற்கு வரட்டு விரதம் உதவாது
அருமைக் காதலை வளர்ப்பதற்கு முரட்டு விரகம் உதவாது
எதிலும் மென்மையென்பதே கோலோச்ச வேண்டும்
அதனுடன் உண்மையும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்…!
என்னையும் உன்னையும் எந்தச்சிக்கல்கள் எதிர்கொண்டாலும்
எண்ணையால் எரியும் தீபம்போல் என்றும் சுடர்விட வேண்டும்!
வா..! வாழ்க்கைப் புத்தகத்தை வாசித்து வாசித்து - வாலிபக் காதலை வளர்த்தெடுக்க..!
ஜான்சி ராணியின் வீர வாள்போல் - வெற்றிக்கொடிக் கட்டட்டும் - நம்
காதல்ப் போர்…!
************************************************************************************************************************************
4 (மெல்லிய மோகனம்)
“உமையவளே உன் கண்கள் ஊதாப்பூ
உன்னால் உருகுகின்ற என் கண்கள் உதிரிப்பூ
இராமுழுதும் தூங்கவில்லை உன் நினைப்பு
என்னை ரசவாதம் செய்கின்றதே பொன் சிரிப்பு”
மறக்காது நெஞ்சுக்குள் உன் உருவம் – காதல்
சிறக்காது பெண்ணின்றி இளம் பருவம்
உறங்காது கண்ணுக்குள் நிழல் வடிவம் – காதலியே
நீயில்லாது எனக்கேது செயல் வடிவம்…
அடங்காத ஆசைகளின் ஆவல் நிறைவேற
புரியாத பாஷைகளை காதலில் பறிமாற
பணிவாகக் கேட்கிறேன் உன்னைத் தரவேண்டும்
தலைவணங்கி ஏற்கிறேன் என்னைப் பெறவேண்டும்
எரியும் தீபத்தில் திரி நீட்டினால்
வெளிச்சம் வெகுவாக பிரகாசிக்கும்
என்னில் நீ - காதல் ஒளி ஏற்றினால்
என் ஜென்மம் அடையும் ஜெயபிரகாசம்
உன்மேனியில் வீசும் வாசம்பட்டு
மலர்கள் வெட்கம் கொள்ளும்
மெல்ல நடக்கும் உன்பாதம்பட்டு
முள்ளும் அருகம் புல்லாகும்
எந்த தெய்வம் நேரில்வந்து
காதலுக்கு சாட்சி சொல்லும் ?
அந்த தெய்வமே நீதானென்று
என்மனம் தீட்சை கொள்ளும் !
**************************************************************************************************************
5 (நாட்டியத் தாரகை)
“அடியே பாலே நடனக்காரி…..! உன்மேனி பலராம் வில்லோடி…?
சைப்பரஸ் நதியின் கிளைபோல் - அலைந்து வளைந்து நிமிறுதடி.!
பாலாடையில் ஊறிய முகத்தில் - பருக்கல் கண்காணா இடத்தில்
இருக்குது இடம் தெரியாமல்… அதிலெனக்கு இடம் தந்தருள்வாயா…?
வட்ட நிலாவில் பாதி - உன் நெற்றியிலிருக்கும் வீதி,
அதில் பயணம் செல்லயெனக்கு - வழி வகுத்துத்தாடி…!
உன் புருவ விளிம்பில் அமர்ந்து - நான் அருந்தவா பதநீர் விருந்து
நான் அருந்தும் பதநீர் விருந்து - எனக்கு தெவிட்டா தேவாமிருது…!
உன் நாசியின் துவாரம் வழியே - நான் நுழையவா தேன்மொழியே ?
நீ சுவாசிக்கும் சுத்தக் காற்று - என்னை நேசித்துச் செல்லும் உள்ளே..!
உன் செவியில் தொங்கும் கம்மல் - என் கண்ணில் அடிக்குது மின்னல்
தும்பைப்பூவின் தூயவெள்ளை - உன்த்தோளிடம் வாங்கவேண்டும் பிச்சை !
ஊரணி ஒன்று சேரும் - ஓரணியாய் உன் உதடு
காரணி செடியைப் போல - அதில் பேரணி நடத்த உதவு…!
சங்ககால பாட்டை - உன் சங்குக் கழுத்து நினைவூட்ட..
தொங்கும் தங்கச் சங்கிலியில் - கொஞ்சம் என்னைத் தங்கவிடு..!
அந்தி மாலைப்பொழுதில் - குந்தி எழுதினேன் கவிதை
என் கவிதை முழுதும் நீயே - முந்திப்பெறுகிறாய் முதற்யிடத்தை..!
நயகரா அருவி - உன் நடனத்தைத் தழுவி, பயணம் போகுது பாறைகளை உழுது..!
சேகுவேராவின் வீரம் - சிறைச்சேதம் செய்தாலும், தோற்றுப்போகாது உனது ஓரங்க நடனம் !
கண்ணதாசன் கண்கள் - உன் எழிலைக் கண்டிருந்தால்….
மையல் கொண்ட மன்மதத்தால், அவனை மரணம் தழுவியிருக்காது
ஜெயகாந்தன் நாவல்கள் உன்னைக் கற்பனை செய்திருந்தால்
விற்பனையில் முதலிடம் பெற்று கின்னஸ் புக்கில் வீற்றிருக்கும் !
உளிக்கொண்டு செதுக்காத உலோகமடி உன் மென்மேனி
கலப்படங்கள் கலக்காத சுலோகமடி உன் கண்மணி
வழித்துணையாய் வந்த நீ - வாழ்க்கைத் துணையாக,
வந்துதிக்க எனக்குள்ளே - ஆவலுக்கு கணக்கில்லே..!
*************************************************************************************************************************
6 (அயல்நாட்டு காதலி)
சிருங்காரம் பண்ணாத சிங்காரியே!
சிங்கப்பூர் ஈன்றெடுத்த சங்கரியே
விரும்பாண்டி விரும்புகிறான் உன்னை – இந்த
விடாகொண்டனின் ஊர் - சிங்கார சென்னை..!”
தூய்மைக்குப் பேர்போன தேசத்துக்காரி
கூவம் நாத்தத்தை சுவாசிக்கும் பொறுமைசாலி
தமிழ் மரபில் வந்துதித்த திறமைசாலி
அமுதே உன்னையடைந்தால் நான் பாக்கியசாலி
மெரினா கரையில் மேயும் மீன்கள்ப்போல்
செரீனா வில்யம்சாய் உனது கண்கள்
புதினா துவையலில் ஊறிய புளியைப்போல்
மதனம் மிகுந்தது உனது இதழ்கள்
மருதிருவரின் வீரம் கேட்டால்
இருதுருவமும் நடுங்கிப் போகும்
திருமகளே உன் கானம் கேட்டால்
சரஸ்வதி விரல்கள் தானாய் வீணை மீட்கும்…!
நயாகரா அருவி, விழும் அழகே தனிதான்! - நாம்
வயாகரா மாத்திரை தழுவும் இனம்தான்..!
நயன்தாராக்கள் உன்னைக் கண்டால்
நழுவிப் போவார்கள் வெகு தூரம்…!
சிங்கை பெற்றத் தங்கமகளே
சென்னை என்னை கரம்பிடிப்பாயோ ?
கங்கை தீர்த்தத்தை திரட்டிவந்து
தங்கமே உனக்கு ஸ்த்தானம் செய்வேன்..!
அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும்
இந்திய மண்ணை நேசிக்கும்
சிங்கை மகளே நீ வாழ்க !
சென்னை உன்னை வாழ்த்துகிறேன் !
***************************************************************************************************************