நடமாடும் நதிகள்--33 -செல்வமுத்தமிழ்

(என் கிறுக்கல்களை முடிந்தவரை ஹைக்கூகளாக்க முயற்சித்துள்ளேன் ,
இது என் முதல் ஹைக்கூ முயற்சியாகும்
பிழைகளை கோடிடுங்கள் திருத்திகொள்கிறேன்,
மிக அதிகமெனில் குட்டுகள் வாங்கிகொள்கிறேன் ... )



சட்டை மறை காக்காகடிதான் ,
சட்டென பட்டது எச்சில்
முதல் முத்தம் !

==========================================

நிர்வாணமானது நிவாரண முகாம் ,
சொந்தவீட்டில் அரசியல்வாதி அன்னதானம்
மழை வெள்ள பாதிப்பு ....

============================================

நிரம்பி வழிகிறது தண்ணீர்,
நிதானமான முகநூல் பகிர்வு
"மழைநீரை சேகரிப்போம்"

=============================================

இலையுதிர்ந்த மரம் ,
ஏக்கத்தோடு கடக்கிறாள்
விதவை

=============================================

ஆழமான புரிதலால்
அதிகம் பேசுவதில்லை
வயோதிகம்

==============================================

அடுப்படியில் அக்கா பிரதியிடப்பட்டாள் ,
அழைத்தபடி உள்வந்தது அப்பாவின் குரல்
செல்வி

================================================

நான் பார்த்த
அதிசயம்
சிட்டுகுருவி !

=================================================

விண்ணெங்கும்
உப்பு சிதறல்
நட்சத்திரங்கள் !

=================================================

லட்சங்களில் பறக்கின்றன ,
கல்லூரி வானில்
பட்டங்கள் !

=================================================

எல்லையற்ற காதலை
இருவருக்குள் (இருவரிக்குள் ) அடக்கிவிடுகிறது
காதல் ஹைக்கூ!!!

==================================================
தாெடர் நடத்தும் தோழர் திரு.ஜின்னா
முகப்பட வடிவமைத்த திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பாளர் திரு முரளி T N
முகப்பட பெயர் பதித்தவர் திரு ஆண்டன் பெனி..
அனைவருக்கும் என் மனமார்ந்த மிக்க நன்றிகள் பல !

தொடரை தொடரும் என் எழுத்து நண்பர்களுக்கும் நன்றி !!!!!

எழுதியவர் : செல்வமுத்தமிழ் (9-Mar-16, 8:33 am)
பார்வை : 361

மேலே