ஜல்லிக்கட்டு

காளைகளை அடக்க
காளைகளுக்குத் தடையாம்!

அடக்க முற்படுகிறது
தடை எதிர்த்து
சீறிப்பாயும் தமிழினக்
காளைகளை
காளையைச் சின்னத்தில் கொண்டும்,

இருகாளைகளையும் காக்க மறந்த
கோழையான அரசு!

எப்படியோ நடந்து கொண்டு தான்
இருக்கிறது
ஒரு ஜல்லிக்கட்டு!

போராட்ட இறுதியிலே
பீட்டா தடை உடைபடட்டும்!
தமிழர்கள் தடைகள் எல்லாம்
விடைபெறட்டும்!

எழுதியவர் : (19-Jan-17, 12:25 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : jallikkattu
பார்வை : 356

மேலே