திருடர்கள் ஜாக்கிரதை

இன்று எங்கள் உறவினருக்கு சென்னையில் திருமணம் இருப்பதால் நானும், அப்பாவும், அம்மாவும் சென்னைக்கு செல்ல முடிவு செய்தோம்.

நாங்கள் சென்னைக்கு செல்வது உறுதியானது. எந்த அளவுக்கு உறுதியானது என்றால் பால்காரர், பேப்பர்காரரிடம் நாங்கள் வெளியூர் செல்கிறோம் அதனால் நீங்கள் பால், பேப்பர் நாளை ஒரு நாள் போட வேண்டாம் என்று கூறிவிட்டோம்.

ஊருக்கு செல்ல கிளம்பிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை நடந்தது. வீட்டிலிருந்து எங்கயாவது வெளியே கிளம்பும் போது தான் என் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுவார்கள். ஆனால் இந்த மிகவும் சண்டை பெரிதாகி விட்டது.

அதனால் நாங்கள் உறவினர் திருமணத்திற்கு செல்லவில்லை. அன்று இரவு உறங்கிக்கொண்டு இருந்தோம். உறங்கிக்கொண்டு இருக்கும் போது ஏதோ சத்தம் என் காதுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.

என் தூக்கம் கலைந்தது ஆனாலும் அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த சத்தம் என் வீட்டின் பின்புற கதவில் இருந்து வருகிறது என்று தெரிந்துக்கொண்டேன். நான் கதவின் அருகில் சென்றேன் யாரோ கதவின் மறுபுரத்திலிருந்து அதை திறக்க முயற்சி செய்கிறார்கள் என்று புரிந்துக்கொண்டேன். எங்கள் வீட்டிற்கு திருடர்கள் வந்திருக்கிறார்கள் என்று புரிந்துக்கொண்டேன்.

உடனே நான் என் அப்பாவையும் அம்மாவையும் எழுப்பினேன். நாங்கள் கதவின் அருகில் சென்றோம். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களிடம் கண்டிப்பாக ஆயுதங்கள் இருக்கும் அவர்கள் வீட்டினுள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி கதவை ஓங்கி தட்டினேன்.

கதவிலிருந்து வரும் சத்தம் நின்றது. அதன் பிறகு நான் கதவை திறந்தேன். இரண்டு பேர் எங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடினார்கள். அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இருந்தார்கள். அதனால் அவர்கள் முகம் சரியாக தெரியவில்லை. நான் அவர்களை பிடிக்கலாம் என்று துரத்திக்கொண்டு ஓடினேன். அவர்களில் ஒருவன் வேகமாக ஓடினான் மற்றொருவன் கொஞ்சம் மெதுவாக ஓடினான். மெதுவாக ஒடுபவனை பிடித்து விடலாம் என்று அவனை துரத்திக்கொண்டு ஓடினேன்.

ஓடிக்கொண்டே அவன் அருகில் சென்றேன். அவன் முகத்தில் அணிந்திருந்த துணியை பிடித்து இழுத்தேன். அவன் முகத்தை பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன். அவன் எங்கள் வீட்டிற்கு பேப்பர் போடுபவன் தான் அவன்.

அந்நேரத்தில் ரோட்டில் இருந்த பல்லத்தை கவனிக்காமல் ஓடியதால் அந்த பல்லத்தில் கால் வைத்து தடுக்கி கீழே விழுந்தேன். அந்த சமயத்தில் அவர்கள் தப்பித்து சென்று விட்டார்கள்.

நான் வீட்டிற்கு சென்று அதை கூறினேன். அதை பற்றி கூறியதும் அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியடைந்தார்கள். அதன் பிறகு அம்மா என்னிடம் கூறினார்கள் "அப்போ நம்ம வீட்டுக்கு திருட வந்த ஒருத்தன் பேப்பர்காரனும், இன்னொருத்தன் பால்காரனும் தானா டா"என்றார்கள். "இன்னொருத்தன் பால்காரனு எப்படி மா சொல்லுற" என்று கேட்டேன்.

"அவங்க இரண்டு பேரும் சகோதர்கள் என்று என்னிடம் ஒரு தடவை அவர்களே கூறியிருக்கிறார்கள் டா" என்று அம்மா கூறினார்கள். மேலும் நான் அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும் நான் அதை நான் நம்பவில்லை. மறுநாள் காலை பால்காரன் வருவான் என்று வெளியே காத்திருந்தேன். எங்கள் வீட்டிற்கு வரமாட்டான் ஆனால் மற்ற வீடுகளுக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் வரவில்லை.

நேற்று வந்ததில் அவனும் ஒருவன் என்பது உறுதியானது. காவல்துறையில் புகார் கொடுத்தோம். அவர்கள் விசாரித்ததில் உண்மையில் அவர்கள் அந்த தொழிலை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதும் தெரியவந்தது.

அதனால் கூறுகிறேன் திருடர்கள் எங்கும் இருப்பார்கள் நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.

எழுதியவர் : சரவணன் (9-Mar-17, 7:13 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 459

மேலே