என்னோட சூப்பர் ஸ்டாரு பேரத்தான்
ஏண்டா மவனே மருதப்பா,
மருதாணிக்கு அடுத்த மாசம்
கொழந்த பொறக்கப் போவுது.
பையனாத்தான் பொறக்கும். நா அவ
நாடியப் பிடிச்சுப் பாத்தேன். நா
உறுதியாச் சொல்லறேன்.
பையனுக்கு பேர முடிவு
பண்ணீட்டயா?
@@@@@
அதெல்லாம் முடிவு பண்ணீட்டம்மா.
என்னோட சூப்பர் ஸ்டாரு பேரத்தான்
வைக்கப்போறேன்.
@@@@@@@@
யாரு சூப்பரு இசுட்டாருன்னு
சொல்லுவாங்களே ரசினி காந்து,
அந்தத் தம்பி பேரையா உம்
பையனுக்கு வைக்கப் போற?
@@@@@
இல்லம்மா, என்னோட சூப்பர் ஸ்டார்
கமல்ஹாசன் பேர எம் பையனுக்கு
வைக்கப்போறம்மா.
@@@@@@@
எதோ சம்முகிங்கற ஒரு படத்தில
வயசான வேலக்காரியா வேசம் போட்டுடடு அருமையா நடிப்பாரே அந்தக் கம்மலுகாசன் தம்பி பேரையா உம் பையனுக்கு வைக்கப்போற?
@@@@@
அம்மா, இப்ப நம்ம நாட்டில சிவாஜி
அய்யாவுக்கு அப்பறம் எந்த வேசம்
குடுத்தாலும் அருமையா நடிக்கிற
ஒரே நடிகர் என்னோட கமல்தாம்மா.
அவுரு மாதிரி எம் பையனையும் ஒரு
பெரிய நடிகரா ஆக்கறதுதாம்மா
என்னோட கனவு.
@@@@@@@@@@@@@@@@@@@@@
The names Kamal & Hasan are of Arabian, Indian origin. These names are shared across persons who are either Muslims or Hindus by birth.
Meanig:
Kamal = lotus. {Iranian (Persian), Arabian, Indian origin}.
Hasan = laughter, good, beautiful (Indian)
Hasan = handsome, good, nice (Arabian)