அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து - ஆன்ஸ் ராஜ்

கனவுகளை கையில் தந்து
நினைவுகளை நிஜமாக்கியவன் நீ!
உருவில்லா என் ஆசைகளுக்கு
உயிர் கொடுத்தவன் நீ!

உடன்பிறவா இரத்த உறவு நீ ,
உன்னில் என் அத்துணையும் நிறைவு பெற்றது!

வழித்துணை நீயாய் இருக்க,
வழித்தடம் எப்படி இருந்தால் என்ன?

முள்ளும் பட்டுக்கம்பளம் தான் தந்தையாய் நீ இருக்கையில்!
கல்லும் காலணி தான்
தாயாய் நீ இருக்கையில்!

வாழ்வெங்கும் என் வேதியியலின் உயிரியலாய் உயிர்காத்து நிற்பாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!

எழுதியவர் : பபியோலா (2-Jun-17, 12:31 am)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 2069

மேலே