கௌரவாஞ்சாலி எனும் பூமொட்டுக்கள்

புவி சுழற்ச்சியை மறந்திடும்
புது(மை) இச்சை தொடர்ந்தால்...

பூப்பெய்தால்...
புது புது கன புருசர்கள் தொல்லை
பூப்பெய்ய ஆசையே இல்லை...
புதுமை விரும்பிகள் வந்திடுவார்கள்
பூப்பெய்யா பூமொட்டை விருப்பி...

பூமொட்டு தாயைத் திட்டிடுவாள்..
கொங்கைப்பாலை தருவதற்குப் பதில்..
கள்ளிப்பாலை கொடுத்திருக்கலாமென்று...

கல்லாய் போனது மனம்..
புண்ணாய் போனது உடல்..
பெண்ணாய் பிறந்ததால்...

நவீன பண்டமாற்று முறை..
வயிற்றுப் பசிக்கு..
உடற்பசி தீர்க்கவேண்டும்...

காதலும் இல்லை...
காமமும் இல்லை...
கண்முன்னே காசு...
கதவுகளுக்குப் பின்னே அழுகை...

நெஞ்சிலே வெள்ளைமயிர்...
இளம்பிஞ்சுடன் சொர்க்கம்...
தீர்ந்திடுமாம் அவன் குறைநோய்...

அவள் முகவரியை தொலைத்திடுவாள்..
அவனுக்கு முன்னே...
அவன் பரிசாக கொடுத்த நோயால்...

சீதையாக ஆசைப்பட்டு
நிதமும் பஞ்சாலியாகிப் போனாள்..
பாண்டவர்களுக்காக அல்ல...
கௌரவர்களுக்காக..
கௌரவாஞ்சாலி என்ற பெயரோடு...

சிந்தனை சிதறுகிறது...
குருதிக் கொதிக்கிறது...
இதயம் வலிக்கிறது...
கைகள் நடுங்குகிறது...
மனம் துடிக்கிறது...
கண்ணீர் வழிகிறது...
இரத்தத்துளிகளாக...

புவி சுழற்ச்சியை மறந்திடும்..
புது(மை) இச்சை தொடர்ந்தால்...

*******************
சிகுவரா
ஏப்ரல் 2005

எழுதியவர் : சிகுவரா (1-Jun-17, 10:27 pm)
பார்வை : 85

மேலே