இலைகள்

உலகிற்கே படியளக்கும்
அற்புத எஜமானர்கள்....
தாவரங்கள் தம்மகத்தே கொண்ட
காக்கும் கடவுளர்கள்....
பாற்கடலை கடைந்த போது
ஆதிசேஷனின் நஞ்சை ஏற்ற
சிவபெருமான் என-
நாம் கொடுக்கும் நஞ்சை ஏற்று
நாம் வாழ அமிர்தம் வழங்கும்
அன்பு தெய்வங்கள்....

எழுதியவர் : பி.தமிழ் முகில் (16-Sep-11, 10:56 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 362

மேலே