வானவில்

வான வீதியில்

வண்ணத் தேரென

கம்பீரமாய்

வளைந்தோடும் வானவில்!

தேரை ஓட்டிச் செல்ல

தேரோட்டியும் இல்லை-

இட்டுச் செல்ல

ஏழ்குதிரைகளும் இல்லை-

சூரியனின் வரவை ஒட்டி

வான வீதிகளில்

அமோக வரவேற்பு!!

மழை மேகங்கள்

பன்னீர் தெளிக்க

வானவில்லின்

வண்ணக் கோலங்கள்!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (6-Nov-11, 3:49 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 304

மேலே