கரை சேரா ஓடங்கள்.....
வாழ்க்கை ஆற்றைக் கடக்க
கல்வி எனும் துடுப்பெடுத்து
அனுபவக் கரை தேடி ...
நானும் பயணித்தேன் ஓடமாய்...
என் மனதில் தான்-
எத்தனை எத்தனை கனவுகள்
எண்ணிலடங்கா ஆசைகள்...
அத்தனையும் நொடிப் பொழுதில்
நொறுங்கிச் சிதறின ....
வறுமை எனும் பாறை மோதி
நான் குழந்தை தொழில் எனும்
கடலில் மூழ்கிய போது.....
இன்னும் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...
கரை சேரா ஓடமாய்.....
எந்தப் புயலடித்து எங்கு ஒதுங்குவேனோ??
யாரறிவார்??