வானவில்!!!
யார் வரைந்து முடித்து
கழுவி உதறிய
வண்ணத் தூரிகை
இத்தனை அழகாய்
தெளித்திருக்கிறது?
பொறுமையாய் வரைய
நேரமில்லை போலும்...
அவசரமாய் கிழித்த கோடு கூட
அம்சமாய் அமைந்தது எப்படி?
நினைத்த நேரத்தில் காண முடியா
அசத்தும் ஆச்சர்யம்...
கண நேரம் கண்ணில் பட்டு
மறையும் ஒளி ஓவியம்....
வில்லென வளைந்து
வண்ண அம்புகளால்
மனதை கொள்ளையடிக்கும்
இயற்கையின் அதிசயம்-
வானவில்!!!