நிலாசூரியனின் கவிதை திருவிழா - பரிசு பெற்றவர்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு

தம்பி நிலாசூரியன் அவர்கள் உழவர்களின் நல்லேறு தினத்தை முன்னிட்டும், புரட்சியாளர் சே குவேராவின் பிறந்தநாளை முன்னிட்டும் நடத்திய கவிதை திருவிழா சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம், எழுத்து தளத்தில் இதுவரை யாருமே மேற்கொள்ள முன்வராத ஒரு சிறு முயற்ச்சியை தோழமைகளான உங்களோடு இணைந்து தம்பி நிலாசூரியன் இந்த காரியத்தை செய்ததற்காய் இந்த கவிதை திருவிழா குழுவில் நானும் ஒரு அங்கமாய் இருந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன், இதே போல் தோழியர் தோழர்கள் பயன்படும்படி மேலும் பல காரியங்களை செய்ய தோழமைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன், இதோ பரிசு பெற்றவர்களின் கருத்து எழுத்து உலக அன்பர்களின் பார்வைக்காக கீழே தரப்பட்டு உள்ளது.

1.
ANANDHAPADHMANABAN RAMESH -

dear sir,just i received the prize amount Rs. 3000/- from the post office. the most valuable moment
of my life has been give by you...by honouring my poem.thanks..and thanks a lot for
your passion for tamil poetry. may god do all the good for you althrough your future.
my sincere thanks to you and to the kavithai thiruvizhaa judges team...and to eluthu
which has given me such a big platform on my poetic career which would have been
ended only as a dream..if i were not a member of eluthu.

thanks nilaasooriyan.
yours...rameshalam (ரமேஷாலம்)


2. VINAYAGAMURUGAN SUNDARAMOORTHY

நன்றி நண்பரே , உங்கள் பரிசு தொகையை பெற்றுக்கொண்டேன் . மிக்க
நன்றி . இந்த பரிசு தொகை சிறியதென்றாலும் எனக்கு ஒரு கோடிக்கு
சமமானது . இதை விட மேல் என்னவென்றால் இந்த போட்டியை நடத்திய திரு நிலா
சூரியனின் நெஞ்சம் . நன்றி நண்பா தொடர்க உங்கள் தமிழ் தொண்டு.

3.அன்பு நண்பர் நிலா சூரியன் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் அனுப்பிய பரிசு தொகையை இன்று பெற்றுக்கொண்டேன். தங்களின் அன்புக்கு நன்றி.
அன்பு நண்பர் திரு. ராமசந்திரன் அவர்கள் சற்று முன் பேசினார்கள். முகத்தால் அறியாத நம் நட்பு உள்ளதால், தமிழ் உணர்வால் வளரட்டும்.

என்றும் அன்புடன்
மோசே

4. அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நிலாசூரியன் அய்யா ! தாங்கள் அறிவித்த பரிசுப்போட்டியில் கலந்து கொண்டபோது நாமும் பத்தோடு பதினொன்று என்றுதான் நினைத்தேன்.எனக்குப் பரிசு கிடைத்தது குறித்த உங்கள் விடுகையைப் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்கள் பரிசுப்பணத்தை அப்படியே கொண்டுபோய் மூன்று மாதங்களுக்கு முன் என்னை மீளாத்துயரில் விட்டுசென்ற எனது தந்தையின் படத்துக்கு முன் வைத்து வணங்கினேன்! என் கவிதைக் கிறுக்கல்களுக்கு அவரும்,அவருடைய ஆலோசனைகளுமே காரணம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிறைய

செய்யலாம்.என்றும் உங்களுடன்
நிறைய நிறைய
அன்புடன் ஆனந்த்

5. எழுத்தில் இணைந்திருப்பதில் மகிழ்கிறேன்..... கண்டிப்பாக செயல்படுவேன்..... இனிதே நடைபெற்ற கவிதைத்திருவிழாவில் பங்குகொண்டதில் மகிழ்கிறேன்........ சிறந்ததோர் விழா.... அமைத்துத்தந்தமைக்கு நன்றி....... குறித்த நேரத்தில் பரிசினைப் பெற்றுக்கொண்டேன்........

எழுதியவர் :sukhanya
*****
மேல உள்ள வரிகள் எழுத்து தளத்திற்கும், எழுத்து உலக அன்பர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் நம்புகிறேன்.

" தமிழோடு தமிழ் சமுதாயத்தையும் காப்போம் - தோழமையுடன் "

நன்றி.
மு.ராமசந்திரன்.

எழுதியவர் : மு.ரா. (27-Jul-12, 5:14 pm)
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே