எருமையின் கனவு

(எருமையும் எஜமானனும் )

அம்மா !
..... சண்டித் தனம் பண்ணக் கூடாது ..
அம்மா !
பிடிவாதம் பண்ணக் கூடாது..
அம்மா !
முரட்டுத் தனம் பண்ணக் கூடாது ..
எரக் கழுத்தில் வைத்தால் குதிக்கக் கூடாது.
இல்லை என்றால்....
உதைத்தான் விழும்.
இல்லை என்றால்
விற்று விடுவார்கள்...
நம்மை யாருக்காவது...

( பசு, எருது விடம் எருமையின் உரையாடல் )

உனக்கு மட்டும் பொங்கல் ?
எங்களுக்கு ஏன் இல்லை ?
எங்களுக்கு மட்டும் தானா
அகத்திக் கீரையும் புல்லுக்கட்டும்..
ஆனால்...
எஜமானன் சம்சாரத்துக்கு மட்டும்
பட்டுப் புடவை, நகை ....

நாங்கதான் வெள்ளைக்கார
ஜாதி இல்லையே ?
கருப்புதானே நாங்களெல்லாம் ...
அதான் எங்கள மட்டம் தட்டுகிறார்கள்
'எருமைமாடு 'என்று ..

நமக்கேன் வம்பு சாமி ..
இந்த எஜமான விட்டா
அசலுருக்கு வேற எஜமான் கிட்ட
விற்று விடுவாங்க ..
போதுமடா சாமி நம்ம பொழப்பு ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (14-Nov-12, 3:50 pm)
பார்வை : 671

மேலே