கானல் நீர்..!!!

ஓடிபிடித்து விளையாடிய
பள்ளி பருவத்தில்,
மிட்டாய் விற்க வந்த
பெட்டிக்கடை தாத்தா..!!!

திருவிழா காலத்தில்
பலூன் கொண்டு வந்த
தொப்பி மாமா...!!

வீதிகளில் பால்,தயிர்
தினமும் விற்க வந்த
பெரிய கம்மல் ஆயா..!!

வீடு தேடி வந்து
கையை பிடித்தாலும்,
யாரும் ஒன்றும் சொல்ல முடியாத
வளையல் விற்க வந்த அண்ணாச்சி..!!

தெருதெருவாய் அலைந்தாலும்
எப்போதும் புன்னகை மாறாமல்,
கலர் கலராக ஐஸ் கொடுத்த
சைக்கிள் அண்ணன்...!!

என எப்போதோ பார்த்த
முகங்கள் உறவுகளாய் மனதில் நிற்க..,,

சொந்த உறவுகள் மட்டும்
கானல் நீராகி விட்டது..??
யாருக்கும் தாகம் தீர்க்காமல்..!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Nov-12, 10:57 am)
பார்வை : 136

மேலே