-------வெளி நாட்டில் தமிழ்-------- அன்புள்ள எழுத்து தோழர்களுக்கும் என்னை...
-------வெளி நாட்டில் தமிழ்--------
அன்புள்ள எழுத்து தோழர்களுக்கும் என்னை பலபடிகள் உயரச் செய்த தமிழறிஞர்களுக்கும் என் நன்றி.
உங்கள் கருத்து எனும் படிகளில் ஏறி வந்துதான் நான் முன்னேறி வருகிறேன் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இது.
தமிழ்மொழி கற்க ஆர்வம் காட்டும் தமிழ் மொழியல்லாத செர்மன், பிரெஞ்ச் போன்ற பிற மொழி பேசும் வெளி நாட்டு குழந்தைகளிடம் தமிழை மின்னிதழ் வழி கற்றுக்கொடுக்கும் பாலசந்திரிகை இதழில் என் அருவிச் சிற்றுலா எனும் குழந்தைப் பாடலை வெளியிட்டு இந்த கிராமியத்தவனையும் அந்த வெளிநாட்டு குழந்தைகளின் மனதில் இருக்கச்செய்து வருகிறது. இதற்கு அதன் ஆசிரியருக்கும் , நான் எழுதும் குழந்தைப் பாடல்களுக்கு ஓவியம் வரைந்து அழகு செய்யும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.