எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------------------------------அன்புத் தோழமைகளுக்கு வணக்கம் ------------------------------------


அமெரிக்க மின்சஞ்சிகையான ”பாலசந்திரிகை” யில் வந்த குழந்தைப் பாடல்.

நீங்கள் கொடுக்கும் வாழ்த்துகளிலும் ஆசிகளிலும் புதுப்புது உயரங்கள் தொட்டுவருகிறேன். வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்துகளில்தான் வளர்கிறேன்.

மேலும்

அம்மாவின் தாயன்பில் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களைப் போன்றோர்களின் ஆசிகளில்தான் ஒரு இராமகாதையை எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். என் குறள் வெண்பாவுக்கு நீங்கள் சொன்ன எதுகை, மோனையை கவனத்தில் எடுத்துக்கொண்டு இதைப் படைக்கப் போகிறேன். 19-May-2016 9:27 am
வாழ்த்துக்கு நன்றி அண்ணா. வாழ்த்துகளில்தான் நான் வளர்ச்சி பெறுகிறேன். 19-May-2016 9:19 am
மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜேந்திரா ! 18-May-2016 11:54 pm
நன்றி தோழரே. 18-May-2016 9:09 pm

-------வெளி நாட்டில் தமிழ்--------


அன்புள்ள எழுத்து தோழர்களுக்கும் என்னை பலபடிகள் உயரச் செய்த தமிழறிஞர்களுக்கும் என் நன்றி.

உங்கள் கருத்து எனும் படிகளில் ஏறி வந்துதான் நான் முன்னேறி வருகிறேன் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இது.

தமிழ்மொழி கற்க ஆர்வம் காட்டும் தமிழ் மொழியல்லாத செர்மன், பிரெஞ்ச் போன்ற பிற மொழி பேசும் வெளி நாட்டு குழந்தைகளிடம் தமிழை மின்னிதழ் வழி கற்றுக்கொடுக்கும் பாலசந்திரிகை இதழில் என் அருவிச் சிற்றுலா எனும் குழந்தைப் பாடலை வெளியிட்டு இந்த கிராமியத்தவனையும் அந்த வெளிநாட்டு குழந்தைகளின் மனதில் இருக்கச்செய்து வருகிறது. இதற்கு அதன் ஆசிரியருக்கும் ,  நான் எழுதும் குழந்தைப் பாடல்களுக்கு ஓவியம் வரைந்து அழகு செய்யும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

மேலும்

நன்றி தங்கையே , குழந்தைகளுக்கான பாடல் என்பதால் இதில் அவர்களின் சந்தத்தையே கொண்டு பாடல் எழுதினேன். 15-Apr-2016 7:12 am
கேயெனார் என்ற பெயரில் கட்டுரை,கதை எழுதி வருபவர் உங்கள் நண்பரா,, மிக்க மகிழ்ச்சி அய்யா. அவருக்கும் தங்களுக்கும் என் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அய்யா. 14-Apr-2016 9:23 pm
நன்றி அய்யா. இயற்கைத் தாயின் உன்னதங்களுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. அதையே கருப்பொருளாய் எடுத்துக்கொண்டு குழந்தைகள் பாடி மகிழ எழுதினேன். தங்களைப் போன்றவர்களின் ஆசிகள் அய்யா. தமிழின் இனிமையும், அதன் அருமையும் வெளி நாட்டு பிறமொழி குழந்தைகளும் அனுபவித்து அதன் உயரத்தை தெரிந்துகொள்ள இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும், தமிழை ஏதாவது ஒரு வகையில் குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் எனக்கு ஒரு வாய்ப்பாகவும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து குழந்தைகள் பாடல் பகுதியை எழுத எனக்கு ஒதுக்கிய ஆசிரியருக்கும், தளத்தோழர்கள் மற்றும் உங்களைப் போன்ற அறிஞர்களும் தான் காரணம். என் பாடல்கள் அதில் குழந்தைப் பாடல் பகுதியை மாதமிருமுறை அலங்கரிக்கப் போகிறது. 14-Apr-2016 7:38 am
நன்றி தோழரே. 14-Apr-2016 7:25 am

---குழந்தைப் பாடல்---

தமிழ்மொழி பேசும் குழந்தைகள் பாடி மகிழவும், தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்க ஆர்வம் கொண்டுள்ள வெளிநாடுவாழ்

பிற மொழி பேசுகின்ற குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழியையும்  தமிழ் மொழி குழந்தைப் பாடல்களையும் அதன் அருமையையும்  ஊட்டி வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட பாலசந்திரிகை எனும் மின்னிதழில் நான் எழுதிய  நீல வண்ண வான்வெளிஎனும் இந்த குழந்தைப்பாடல் வெளியானது. அதன் ஆசிரியர் அவர்களுக்கும்  இன்னும் இன்னும் முன்னேற என்னை ஊக்குவித்துவரும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

மருத்துவர் கன்னியப்பன் அய்யாவை சந்திக்காமல் போயிருந்தால் நிச்சயம் நான் இத்தனை முயன்றிருப்பேனா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் கடவுளாகப் பார்த்து எனக்காக அனுப்பிய தூதுவராகவே அவர் தெரிகிறார். என்னை வளரச்செய்வதில் ஒரு ஆசானாக, அன்பை தருவதில் அன்னையாக, என் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படும் ஒரு தந்தையாக மூன்றும் கலந்த கலவையாகத்தான் நான் பார்க்கிறேன். இலக்கணப்பா எழுத எனக்கு அருகதையில்லை என்று ஒதுங்கி இருந்த என்னை இலக்கணப்பாக்களின் பக்கம் திருப்பி, வெண்பா எழுதுமளவுக்கு உயர்த்தியவர். நீங்கள் சொன்னது போல் அள்ளக்குறையாத உணவளித்த பரம்பரையில் வந்தவர் என்பதால் என் இலக்கணப்பசிக்கு ஒவ்வொன்றையும் அள்ளி அள்ளி கொடுக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் அங்கு நாடு கடந்து வாழும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவிக்கவும் அய்யா. உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிகளால்தான் இப்போது குழந்தைப் பாடல்கள் மூலம் வெளி நாட்டிலும் தெரிகிறேன். நன்றி அய்யா 15-Apr-2016 11:55 pm
பாராட்டுகள். கவிதை பற்றி மருத்துவர் கன்னியப்பன் தனது கவிதைமணி கவிதையில் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள் . ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வள்ளுவம் வாழ்வதெங் கே - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் என்ற படைப்பில், எழுத்து நண்பர் Dr.V.K.Kanniappan பதில் அளித்துள்ளார். கருத்து: நம் எழுத்து தள நண்பர் க.அர.ராசேந்திரன் கவிதைமணியில் அருமையான சந்தத்துடன் எழுதியுள்ள 'வள்ளுவம் வாழ்வதெங்கே' வாசித்துப் பாருங்கள். நானும் படித்த விபரத்தை அனுப்பினேன், என் நெஞ்சார்ந்த இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் அன்னை ஆசிகள். 13-Apr-2016 12:37 am
அம்மாவின் வாழ்த்துகளை ஆசிகளாய் கொள்கிறேன் வாழ்த்துக்கு நன்றி அம்மா. 11-Apr-2016 9:22 pm
நன்றி தோழரே. தங்கள் வாழ்த்து இன்னும் பல படிகளை தாண்டச் செய்யும் . 11-Apr-2016 9:21 pm

மேலே