பயணத்தின் முடிவு தோல்வி என அறிந்தால் தனித்து போய்விடலாம்...
பயணத்தின் முடிவு
தோல்வி என அறிந்தால்
தனித்து போய்விடலாம்
நம்தோல்வி பகிர்தலின்றி
நம்மோடு போகட்டும்..!
என்றும் வாழ்க்கையில்
வெற்றியின் பாதையில் மட்டும்
தனித்து போய்விடாதிருப்போம்..
நாம்மோடு இன்னொருவரும்
நலம்வாழ நாம் நினைத்தால்..
இவ்வுலகில் யாவரும்
நலம் வாழலாம் ..
நம்மில் பலர் தயவில்..!!!
..கவிபாரதி..