எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் நல்லவனாக இருந்தேன்.. உலகம் என்னை மாற்றியது என்று...

நான் நல்லவனாக
இருந்தேன்..
உலகம் என்னை
மாற்றியது என்று
பொய் உரைத்தல்
சந்தர்ப்பவாதியாக..
பிறர்மேல் பழிக்கூறி
தப்பித்துகொள்வதாகும்..
..........ஆனால்............
நானும் நல்லவனாக
இருந்தேன்...
உலக ஆசையில்
சுயநலம்....
என் எண்ணத்தில் வளர
பிறர்கவரும் மாற்றத்தை
எனக்காய் தேடினேன்
என்பதே உண்மை..!
நம் மனம் இணங்காது
யாரும் யாரையும்
மாற்ற முடியாது..
மாற்றம் என்பது அவரவர்
மனபோக்கில் விளைவது..!

பதிவு : கவிபாரதி
நாள் : 25-Jun-14, 5:02 am

மேலே