வாழ்ந்து முடிக்கும் நாள்வரை திருத்தமில்லாது எல்லோர் மனதிலும் கெட்டகுணம்.......
வாழ்ந்து முடிக்கும் நாள்வரை
திருத்தமில்லாது
எல்லோர் மனதிலும்
கெட்டகுணம்....
ஏதோவொரு உருவில்
மறைந்திருக்கிறது..
அதை உணரும் தருணம்
பிறர் அறியாது..
மறைத்து வாழ்பவன் மனிதன்..
கெட்டதென அறிந்தகணம்
விலகி வாழ்பவன் மாமனிதன்..
தவறுகளை முடிந்தவரை
திருத்திகொள்வோம்..
திருத்த முடியாத தவறுகளையும்
மரண ரகசியமாக மறைத்து வாழ்வோம்..!
இதில் ரணம் நமக்கென்றாலும்
பிறர் மகிழ்வது காணலாம்..!!
...கவிபாரதி...